தஞ்சாவூர்: விவசாயிகளின் நலன் கருதி மேட்டூர் அணையில் இருந்து உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தி.மு.க. அரசைக் வலியுறுத்தி உள்ளார்.

அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தஞ்சாவூர் அருகே, வண்ணாரப்பேட்டை பகுதியில் சுமார் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் காய்ந்து வருவதை நேரில் பார்வையிட்டு, விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, போதுமான தண்ணீர் வரத்து இல்லாததால் பயிர்கள் காயந்து போகும் நிலை உருவாகி உள்ளது, அதனால், அரசு, விவசாயிகளின் நலன் கருதி மேட்டூர் அணையில் இருந்து உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் வலியுறுத்தினார்.
நெற்பயிருக்கு தண்ணீர் பாய்ச்சவில்லை என்றால் இந்த பயிர்கள் எல்லாம் காய்ந்து சேதம் அடைந்து விடும் என்றவர், இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்கு ஆளாவார்கள். விவசாயிகளுடைய நன்மையை கருதி, கஷ்டத்தை உணர்ந்து, விவசாயிகளுக்கு தேவையான தண்ணீரை மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிட வேண்டும் என்றவர், அரசு தண்ணீர் திறந்தால்தான் காய்ந்து போகவுள்ள பயிரை காப்பாற்ற முடியும் என்றார்.
தொடர்ந்து பேசியவர், தற்போதைய நிலையில் தண்ணீர் இல்லாமல் பயிர்கள் காய்ந்துபோகும் நிலை உள்ளது, இன்னும் 20 நாட்கள் தண்ணீர் பாய்ச்சினால் தான் நெல் விளைச்சல் பெற முடியும் என்றவர், கஷ்டப்பட்டு உழைத்து, இந்த நெற்பயிரை விவசாயிகள் வளர்த்து இருக்கிறார்கள். அதுவும் ரத்தத்தை வியர்வையாக சிந்தி விவசாயிகள் உழைத்துள்ளனர். இதை நம்பித்தான் அவர்களது குடும்பம் இருக்கிறது. வாழ்வாதாரம் இருக்கிறது. அவர்களது கஷ்டத்தை அரசு உணர்ந்து, 20 நாட்கள் தண்ணீர் திறக்க வேண்டும் என்றவர்கள், இது விவசாயிகளின் நியாயமான கோரிக்கையாகும்.
தண்ணீரை திறந்து பயிர்களை காப்பாற்றினால் விவசாயிகளுக்கு ஒரு வருமானம் கிடைத்து விடும். இந்த அரசாங்கத்திற்கு தேவையான நெல் உற்பத்தி அதிகமாக கிடைக்கும். எனவே விவசாயிகளுடைய கோரிக்கை மற்றும் கஷ்டத்தை உணர்ந்து உடனடியாக மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் நிறகக வேண்டும். அப்படி திறந்தால் தான் இந்த விவசாய பயிர்களை, நெற்பயிரை காப்பாற்ற முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
[youtube-feed feed=1]