
தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர் பணிகள் இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில் வரும் 17ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகிறது. வரைவு வாக்காளர் பட்டியலில் 97.37 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டிருந்த நிலையில், 34.75 லட்சம் பேர் திருத்தம் மற்றும் புதியதாகச் சேர்க்கக் கோரி விண்ணப்பித்துள்ளனர்.
மேலும் விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. ஏற்கனவே விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு வரும் நிலையில், இன்று வரும் விண்ணபங்களையும் ஆய்வு செய்யும் பணிகள் முடித்து, வரும் 17ந்தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதையடுத்து, தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகும் வாய்ப்பு உள்ளது.