ராணிப்பேட்டை: தமிழ்நாட்டில் விரைவில் முதலீடுகள் செயல்பாட்டு மாநாடு நடத்தப்படும் என  ராணிப்பேட்டையில்  டாடா கார் தொழிற்சாலையை தொடங்கி வைத்து பேசிய முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

 ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் பனப்பாக்கம் தொழிற்பூங்காவில் டாடா மோட்டாா்ஸ் நிறுவனத்தின் ன் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்  உற்பத்தி ஆலையை முதல்வர் ஸ்டாலின்  திறந்து வைத்தார். பின்னர் அங்குள்ள காரில் ஏறிய பயணம் செய்தார். டாடா மோட்டார்ஸ் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்ட முதல் ரேஞ்ச் ரோவர் காரை  ஓட்டி மகிழ்ந்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின்,  தமிழகத்துக்கு இன்று பொன்னான நாள். ரூ.9,000 கோடி முதலீட்டில் 5,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகன உற்பத்தி ஆலை இன்று திறக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் வாகன உற்பத்தி மையம் தமிழ்நாடு; மின்வாகன உற்பத்தியின் தலைநகரமும் தமிழ்நாடுதான். த

மிழ்நாட்டில் உள்ள எந்த துறையில் முதலீடு செய்தாலும் அதற்கு நாங்கள் ஒத்துழைப்பு வழங்குவோம். டாடா நிறுவனம் இன்னும் அதிகமாக முதலீடு செய்ய வேண்டும். மற்ற மாநிலங்களைத் தாண்டி உலக நாடுகளோடு நாம் போட்டிபோடுகிறோம். ஏற்கெனவே லீடராக இருக்கும் துறையில் இன்னும் பெரிய சாதனைகளை நாம் செய்ய வேண்டும். புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்து இட்டால் போதாது, அதை உடனே செயல்படுத்த வேண்டும்.

இந்த கார் தொழிற்சாலையை அடிக்கல் நாட்டப்பட்டு 16 மாதத்திலேயே கார் ஆலை அமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது. தமிழ்நாடு எந்த அளவுக்கு தொழில்செய்ய ஏற்ற மாநிலம் என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டு. அரசின் செயல்பாட்டை எடுத்துக்காட்டும் வகையில் விரைவில் முதலீடுகள் செயல்பாட்டு மாநாடு நடத்தப்படவுள்ளது. விரைவான செயல்பாடு, அனுமதி, ஒப்புதல், வணிக பிரிவு செயல்பாடுகளை மாநாட்டில் காட்டப்போகிறோம்.

இவ்வாறு கூறினார்.

[youtube-feed feed=1]