சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர்  பிப்ரவரி 17-ல்  தொடங்கும் என தெரிவித்த சபாநாயகர் அப்பாவு, அன்றே இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என அறிவித்தார்.

இன்று நெல்லையில்  செய்தியாளர்களை சந்தித்த  பேரவை தலைவர் அப்பாவு  சந்தித்தார்.  அப்போது,  தமிழ்நாடு சட்டமன்ற பேரவை கூட்டத்துடன் 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி 17ஆம் தேதி காலை 9:30 மணிக்கு கூடுகிறது என்றும், அன்றைய தினம் 2026-27 இடைக்கால நிதிநிலை அறிக்கையை தமிழக நிதி அமைச்சர் வாசிப்பார் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், பிப்ரவரி  20 ம் தேதி 2026-27 க்கான முன் பண மாணிய கோரிக்கையும்,   2025-26 க்கான கூடுதல் செலவுக்கான மாணிய கோரிக்கை அளிக்கப்படும் எனவும், தெரிவித்தவர், கூட்டத்தொடர் எத்தனை நாள் நடத்தப்படும் என்பது குறித்து சட்டமன்ற  அலுவல் ஆய்வுக்குழு கூடி  முடிவு செய்து அறிவிக்கப்படும் என்றார்.

 

[youtube-feed feed=1]