புதுக்​கோட்டை: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை திமுகதான் தாமதம் செய்கிறது என்று கூறிய  கார்த்தி சிதம்பரம்  காங்​கிரஸ் இருந்​தால்​தான் அந்​தக் கூட்​ட​ணிக்கு மதச்​சார்​பின்மை என்ற அடை​யாளம் என்றும் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என காங்கிரஸ் கட்சியில் குரல் எழுந்துள்ளது திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், தற்போது திமுகவை கார்த்தி சிதம்பரம் குற்றம் சாட்டி இருப்பது மேலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுக்​கோட்​டை​யில் செய்​தி​யாளர்​களிடம்  பேசிய கார்த்தி சிதம்பம், தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி,  கூட்​டணி பேச்​சு​வார்த்தை நடத்த காங்​கிரஸ் கட்சி  சார்பில் ஏற்கனவே குழு அமைக்கப்பட்டு விட்டனது. ஆனால்,  குழு அமைக்​காமல் தாம​திப்​பது திமுகதான் என்றார்.  இதுவே விமர்சனங்களுக்கு காரணமாக அமைந்து வருகிறது.

திமுக  குழு அமைத்து பேச்​சு​வார்த்தை நடத்​தி​விட்​டால்,  கூட்டணி தொடர்பான எந்தவொரு விமர்​சனங்​கள் எழாது. இல்​லா​விட்​டால் சமூக வலை​தளங்​களில் வரும் விமர்​சனங்​களை சகித்​துக் கொள்​ளத்​தான் வேண்​டும் என்றார்.

தொடர்ந்து பேசியவர்,   கல்​யாணத்​துக்கு ஏற்​பாடு செய்​யும்​போது சில சங்​கடங்​கள் இருக்​கத்​தான் செய்​யும். ஆனால், அவை அனைத்தும்,   முகூர்த்த நேரத்​தின்​போது எல்​லாம் சரி​யாகி விடும் என்​ப​தைப்​போல, காங்​கிரஸ்-திமுக கூட்​டணி பேச்​சு​வார்த்​தை​யும் தேர்​தல் நேரத்​தில் சரி​யாகி​விடும் என்றார்.

திமுக கூட்டணியில்   காங்​கிரஸ் இருந்​தால்​தான் அந்​தக் கூட்​ட​ணிக்கு மதச்​சார்​பின்மை என்ற அடை​யாளம் கிடைக்​கும். அப்​போது​தான் சிறு​பான்​மை​யின மக்​களுக்கு நம்​பிக்கை உரு​வாகும். இல்லா​விட்​டால் நம்​பிக்கை ஏற்​ப​டாது என்றவர்,   காங்​கிரஸ் கட்​சிக்கு தனிப்​பட்ட முறை​யில் குறிப்​பிட்ட அளவுக்​கு​தான் வாக்​கு​கள் உள்​ளன. ஆனால், கூட்​ட​ணி​யில் சேர்ந்​து​விட்​டால் எங்​களை கூட்​டலாக மட்​டும் பார்க்​கக் கூடாது, பெருக்​கலாக பார்க்க வேண்​டும் என்றார்.

விஜய் பெரிய நடிகர். அவருக்​கென்று ரசிகர் கூட்​டம் உள்​ளது. அது வாக்கு வங்​கி​யாக மாறு​வதற்​கும் வாய்ப்பு உள்​ளது. ஆனால், தேர்​தலில் வெற்றி கிடைக்​குமா என்​பதை என்​னால் உறு​தி​யாக கூற முடி​யாது.

இவ்​வாறு அவர் கூறினார்​.

[youtube-feed feed=1]