சென்னை: புலி படத்திற்கு பெற்ற ரூ. 15 கோடி வருமானத்தை கணக்கில் காட்டவில்லை என ரூ.1.50 கோடி அபராதம் விதித்திருந்தது. அபராதம் விதித்ததில் எந்த விதிமீறலும் இல்லை எனவும், அதனால் ரூ.1.50 கோடி அபராத்தை செலுத்த வேண்டும் என கூறி மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
வருமானத்தை மறைத்ததாக ரூ.1.50 கோடி அபராதம் விதித்ததற்கு எதிராக விஜய் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது. வருமானத்தை மறைத்ததாக, வருமான வரித்துறை விதித்த ரூ.1.50 கோடி அபராதத்தை எதிர்த்து நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி தீர்ப்பு வழங்கி உள்ளார்.

‘முன்னதாக கடந்த 2015-16 நிதியாண்டில், நடிகர் விஜய் தனது வருமானத்தில் ரூ.15 கோடியை தானாக முன்வந்து கணக்கில் காட்டவில்லை எனக் கூறி, வருமான வரித்துறை அவருக்கு ரூ.1.5 கோடி அபராதம் விதித்தது. இதை எதிர்த்து 2022-ம் ஆண்டு விஜய் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்னிலையில் 23.01.2026 அன்று விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையிபோது, வருமான வரித்துறை சார்பில் ஆஜரான ஐடி துறையின் மூத்த வழக்கறிஞர் ஏ.பி.ஸ்ரீனிவாஸ், 2015-ல் ‘புலி’ பட தயாரிப்பாளர்கள் வழங்கிய ஆவணங்களின்படி, விஜய்க்கு காசோலை மூலம் வழங்கப்பட்ட ரூ.16 கோடி தவிர, ரூ.4.93 கோடி ரொக்கமாக வழங்கப்பட்டுள்ளது. சோதனையின் போது இதனை ஒப்புக்கொண்ட விஜய், பின்னர் ரூ.15 கோடி கூடுதல் வருமானத்தை கணக்கில் காட்ட ஒப்புக்கொண்டார். எனவே, வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 271AAB(1)-ன் கீழ் விதிக்கப்பட்ட அபராதம் சட்டப்படி சரியானது. அதனால், இந்த மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார்.
தொடர்ந்து, நடிகர் விஜய் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த அபராத நடவடிக்கைகள் காலாவதியானவை. விதிமுறைப்படி, இந்த நடவடிக்கைகள் ஜூன் 30, 2019-க்குள் தொடங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ஐடி துறை இதனை ஜூன் 30, 2022 அன்றுதான் மேற்கொண்டுள்ளது. மதிப்பீட்டு அதிகாரி, கூடுதல் ஆணையருக்கு பரிந்துரை செய்த தேதியிலிருந்துதான் கால வரம்பு கணக்கிடப்பட வேண்டும் என்று வாதிட்டார்.

கடந்த செப்டம்பர் 30, 2015-ல் விஜய்க்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது ‘புலி’ படத்திற்காக ரூ.5 கோடி ரொக்கமாகப் பெற்றதை விஜய் ஒப்புக்கொண்டார். வரிச் சிக்கல்களைத் தவிர்க்க, அந்த ஆண்டில் மொத்தம் ரூ.15 கோடி கூடுதல் வருமானத்தைக் காட்ட அவர் சம்மதித்தார். விஜய் தனது வருமான வரித் தாக்கல் படிவத்தில், ரசிகர் மன்றச் செலவுகளுக்காக ரூ.64.71 லட்சம் வரி விலக்கு கோரியிருந்தார். ஆனால், ஐடி துறை இதனை நிராகரித்து, அவரது மொத்த வரி விதிக்கத்தக்க வருமானத்தை ரூ.38.25 கோடியாக நிர்ணயித்தது.
மதிப்பீட்டு உத்தரவு மற்றும் பிற அபராதங்களுக்கு எதிராக விஜய் ஏற்கனவே மேல்முறையீடு செய்துள்ள நிலையில், பிரிவு 271AAB(1)-ன் கீழ் விதிக்கப்பட்ட அபராதத்தை மட்டும் ரிட் மனு மூலம் எதிர்த்துள்ளார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளார்.
இந்நிலையில், நடிகர் விஜய் வருமானத்தை கணக்கில் காட்டாமல் மறைத்ததாக, வருமான வரித்துறை அவருக்கு ரூ.1.50 கோடி அபராதம் விதித்ததற்கு எதிராக விஜய் தொடர்ந்த வழக்கில் வெள்ளிக்கிழமை (06.02.2026) உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி, வருகிற சட்டமன்றத் தேர்தலை சந்திக்க உள்ள நிலையில், வருமானத்தை கணக்கில் காட்டாமல் மறைத்ததாக, வருமான வரித்துறை அபராதம் விதித்ததற்கு எதிராக விஜய் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகி உள்ளது.
வருமானத்தை மறைத்ததாக, வருமான வரித்துறை விதித்த ரூ.1.50 கோடி அபராதத்தை எதிர்த்து நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி தீர்ப்பு வழங்கி உள்ளார்.
நேர்மையான அரசியல் என கூறிகொண்டு மக்களை ஏமாற்றி வரும் நடிகர் விஜய்மீது ஏற்கனவே கார் இறக்குமதியின்போது வரி மோசடி செய்ததாக குற்றச்சாட்டு உள்ளது. தற்போது வருமான வரியிலும் அவர் மோசடி செய்துள்ளது தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
[youtube-feed feed=1]