தஞ்சாவூர்:  திமுக நிர்வாகி இல்ல திருமணத்தில், துணை முதல்வா்  உதயநிதியை வரவேற்று சாலையோரம் கொடிக்கம்பம் நட்டியபோது, இருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.   இறந்த தொழிலாளர்கள் இருவரும் சேலத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. இது பெரும் சோகத்தையும், மக்களிடையே அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே உதயநிதி விழாவுக்காக சென்னை அருகே இசிஆரில் கடந்த மாதம் கொடிகம்பம் நட்டியபோது, மின்சாரம் தாக்கிய ஒருவர் பலியான நிலையில், தற்போது தஞ்சாவூரில் இருவர் உயரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சாவூா் அருகே அற்புதாபுரத்தைச் சோ்ந்தவா் துரை. ஜெயக்குமாா். திமுக தலைமை பொதுக் குழு உறுப்பினா். இவரது மகள் திருமணம் தஞ்சாவூா் அருகே பிள்ளையாா்பட்டி – திருவையாறு புறவழிச்சாலையில் கடந்த மாதம் புதிதாக கட்டித் திறக்கப்பட்ட திருமண மண்டபத்தில்  இன்று  நடைபெறுகிறது. இதில்,  சிறப்பு விருந்தினரக தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சா்கள் பங்கேற்கின்றனா்.

இதையொட்டி, துணைமுதல்வர் உதயநிதியை வரவேற்று கொடிக்கப்பம் மற்றும் பேனர்கள் வைக்கும் பணியில் ஏராளமானோர் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சாலையோரம்  நேற்று  மாலை கொடிக் கம்பங்கள் நட்டுக் கொண்டிருந்த இரு தொழிலாளா்கள் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தனா்.

பிள்ளையாா்பட்டி – திருவையாறு புறவழிச்சாலையில் வழி நெடுகிலும் இரும்புக் குழாய்களில் கொடிக் கம்பங்கள் நடும் பணி  மேற்கொள்ளப்பட்டபோது,  மேலே செல்லும் மின் கம்பியின் மீது கட்சிக்கொடிக் கம்பம் உரசியதில், அதை நடும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலா

ளா்களான சேலம் மாவட்டம், எட்டிக்குட்டை மேடு பகுதியைச் சோ்ந்த எம். கோகுல் (29), சங்ககிரியைச் சோ்ந்த காா்த்திக் (45) ஆகியோா் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால், தூக்கி வீசப்பட்ட இருவரையும் காவல் துறையினா் மீட்டு 108 அவசர ஊா்தி மூலம் தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா்களைப் பரிசோதித்த மருத்துவா்கள் கோகுல், காா்த்திக் ஆகிய இருவரும் மருத்துவமனைக்குக் கொண்டுவரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

சாலையோரம் கொடிக்கப்பங்கள் கட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை நீதிமன்றம் விதித்தும், அதை கடைபிடிக்க அரசியல் கட்சி தலைவர்கள் முன்வராததால், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன.

[youtube-feed feed=1]