மதுரை: பிப்ரவரி 28ஆம் தேதி மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின்  முதற்கட்ட கட்டுமான பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், அதை பிரதமர் திறந்து வைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்னும் 3 மாதங்களுக்குள் நடைபெற உள்ளது. இதனால், அரசியல் களம் தகதகவென தகிக்க தொடங்கி உள்ளது. ஆட்சி தக்க வைக்க திமுக வியூகம் வகுத்து வருகிறது. அதே வேளையில் ஆட்சியை கைப்பற்ற அதிமுக கூட்டணி, தவெக போன்ற கட்சிகள்  களமாடி வருகின்றன.

இந்த நிலையில்,  மதுரையில்  பிப்ரவரி 28ந்தேதி  அதிமுக பாஜக தலைமையில்  தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அரசியல் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில், பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில், அன்றைய தினம்,  மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 2019ம் ஆண்டு நாடாளுமன்றதேர்தலுக்கு முன்னதாக  அடிக்கல் நாட்டப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெறாமல் இருந்து வந்தது. இதுதொடர்பான கடுமையான விமர்சனங்கள் எழுந்த நிலையில், பிரச்சினைகள்  முடிக்கப்பட்டு கடந்த  2024, மே 22இல் கட்டுமானப் பணிகள் தொடங்கின.

அதன்படி,  மதுரையில் ரூ.2021 கோடி ரூபாய் மதிப்பில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. முதற்கட்ட பணிகள் முடிந்துள்ள நிலையில் முழு கட்டுமானப் பணியையும் பிப்ரவரி 2027க்குள் முடிக்கத் திட்டமிட்டுள்ளன.

[youtube-feed feed=1]