சென்னை: தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்றதேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்காளர் இறுதிப்பட்டியல் பிப்ரவரி 17ந்தேதி வெளியாகிறது.

தமிழகத்தில்  இன்னும் மூன்று மாதங்களுக்குள் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து தமிழ்நாட்டில் தீவிர வாக்காளர் பட்டியல் சீர்திருத்தம்  பணிகள் நடைபெற்றது. இதையடுத்துவரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது. இதில் 97 லட்சம் வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்ட நிலையில், விடுபட்டவர்கள் பெயர்கள் சேர்க்க கடந்த 3 மாதம் அவகாசம் வழங்கப்பட்டது. இதையடுத்து, இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 17ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, நடக்கும் தேர்தல் முன்னேற்பாடுகள் பற்றி ஆய்வு செய்ய வரும் 12-ந் தேதி தேர்தல் துணை கமிஷனர்கள் தமிழகத்திற்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் சென்னையில் 2 நாட்கள் தங்கியிருந்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் மற்றும் உயர் அதிகாரிகளை அழைத்து ஆலோசனை மேற்கொள்வார்கள். பின்னர் தமிழகத்தில் நடக்கும் தேர்தல் முன்னேற்பாடுகள் பற்றி தேர்தல் கமிஷனிடம் அவர்கள் தெரிவிப்பார்கள்.

அதன் பின்னர் தலைமை தேர்தல் கமிஷனர் தலைமையில் தேர்தல் கமிஷன் குழுவினர் வந்து ஆய்வு மேற்கொள்வார்கள். அவர்கள் வருகையின்போது, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரநிதிகள், மாவட்ட தேர்தல் அதிகாரிகள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், வருமான வரித்துறை, வங்கிகள், அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் உள்ளிட்ட மத்திய அரசுத் துறைகளின் அதிகாரிகளை அழைத்து தலைமை தேர்தல் கமிஷனர் ஆலோசனை நடத்துவார்.

[youtube-feed feed=1]