சென்னை: சட்டசபைத் தேர்தலில் அதிமுகவை விட அதிக வாக்குகளை தவெக கைப்பற்றும் என்று காங்கிரஸ் கட்சி நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் 3வது பெரிய கட்சியாக தவெக வளர்ந்துவிட்டதாக கூறிய பிரவீன் சக்ரவர்த்தி, தனித்து போட்டியிட்டால் 17 முதல் 18 சதவிகித வாக்குகளை கைப்பற்றுவார் என்றும் கணித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருக்கி வரும் நிலையில், திமுக கூட்டணி, அதிமுக பாஜக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனை போட்டி உருவாகி உள்ளது. தவெக தலைவர் விஜய் ஆட்சியில் பங்கு என ஆசை வார்த்தை கூறியும், இதுவரை எந்தவொரு கட்சியும் அவருடன் கூட்டணிக்கு செல்லாத நிலையில், காங்கிரஸ் கட்சியின் சில மூத்த தலைவர்கள், விஜய் உடன் கூட்டணி வைக்க ஆசைப்படுகின்றனர். இதனால் கட்சிக்குள் சலசலப்பு எழுந்துள்ளது. இதற்கிடையில், ராகுல் காந்தியின் நம்பிக்கைக்கு உரியவர் என கருதப்படும், காங்கிரஸ் கட்சியின்  தரவுப் பகுப்பாய்வுப் பிரிவு தலைவர்  பிரவீன் சக்கரவர்த்தி தவெகவுக்கு ஆதரவாகவு6ம், கூட்டணி கட்சியான திமுகவுக்கு எதிராகவும் பேசி வருகிறார்.

இதற்கிடையில்,  தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில்,ர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் தமிழக அரசியலில் தீவிர தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் ஆய்வாளர்கள் கூறி வருகின்றன.   ஏற்கனவே திமுக, அதிமுக என மாபெரும் கூட்டணி களத்தில் உள்ள நிலையில், அவர்களை எதிர்த்து களமிறங்கும் விஜய்,  இரு கட்சிகளையும் சரமாரியாக விமர்சித்து வருகிறார். மேலும், அவருக்கு உள்ள இளைஞர்கள் கூட்டம் வாக்கு வங்கிகளாக மாறும் என்றும் நம்பப்படுகிறது.

இந்த நிலையில், ராகுல் காந்தியின் நண்பருமான பிரவீன் சக்ரவர்த்தி தவெக தலைவார் விஜய்க்கு மீண்டும் ஆதரவாக ப  கருத்துக்களை தெரிவித்து உள்ளது. சமீபத்தில்,  தவெகவுக்கு விசில் சின்னம் அறிவிக்கப்பட்டதும், தேர்தலுக்கு விசில் ஊதியாச்சி என்று கூறியவர், தற்போது,  தவெகவுக்கு அதிமுகவை விட அதிக வாக்கு வங்கி இருப்பதாக தெரிவித்து உள்ளார்.

புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ள பிரவீன் சக்ரவர்த்தி , தமிழக சட்டசபைத் தேர்தலில் தவெக போட்டியிட்டால் 17 முதல் 18 சதவிகித வாக்குகளை கைப்பற்றும் என நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

தமிழ்நாட்டின் 3வது அரசியல் சக்தி தமிழக வெற்றிக் கழகம் தான். விஜய்யை மக்கள் அங்கீகரித்துவிட்டனர். விஜய்க்கு வீட்டு ஒரு வாக்கு இருப்பதாக நினைக்கிறேன். கூட்டணி இல்லாமல் தவெக தனித்துப் போட்டி யிட்டால் கூட தவெக வலுவாக உள்ளது. இந்த தேர்தலில் அதிமுகவை பின்னுக்கு தள்ளி தவெக அதிக வாக்குகளை பெறும் என்று தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலையில், விஜய் கட்சியான தவெகவுக்கு  இளைஞர்கள், பெண்கள் அதிகளவில்  வரவேற்பு உள்ளது என்றவர்,  வாக்காளார்கள் தெளிவாக விஜய்க்கு வாக்களிப்போம் என்கிறார்கள். மக்கள் விஜய்யை அரசியல்வாதியாக பார்க்கிறார்கள் என்றும்  தெரிவித்துள்ளார்.

விஜய் நடத்தும் பொதுக்கூட்டங்களில் அலைகடலென பொதுமக்கள் கூடி வரும் நிலையில்,  அதிமு, திமுகவுக்கு வழக்கமாக கிடைக்கும்  வாக்குகளையும்,  சிறுபான்மை   வாக்குகளையும்  விஜய் பிரிப்பார் என நம்பப்படுகிறது.   ஏனெனில் 18 முதல் 30 வயது வரையிலான இளம் வாக்காளர்களில் தவெக முதல் தேர்வாக மாறும் வாய்ப்பு அதிகம். இந்த இளம் வாக்காளர்கள் தங்களோடு மட்டுமல்லாமல், குடும்ப உறுப்பினர்களையும் பாதிக்கக்கூடியவர்கள். அதனால் விஜய் இந்த தேர்தலில் முக்கிய பங்கு வகிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

[youtube-feed feed=1]