சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் ‘நானும் ரௌடிதான்னு விஜய் வருகிறார்’, அவர் கட்சியின்  தலைவராக இருக்க அருகதை அற்றவர் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காட்டமாக விமர்சித்துள்ளார்.

மேலும்,   நடிகர் விஜய்யின் சம்பளம் குறித்து கருப்பு  வெள்ளையாக அறிவிப்பாரா, , வரி விபரங்கள் மற்றும் அவரது கட்சிக்கு வரும் நிதி ஆதாரங்கள் குறித்தும் காரசாரமான கேள்விகளை எழுப்பி விமர்சித்துள்ளார்.

அண்ணா நினைவுநாளையொட்டி, சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக சார்பில் எடப்பாடி தலைமையில் மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமாரிடம், தவெக தலைவர் விஜய் அதிமுகவை விமர்சித்துள்ளது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர் பதில் அளித்தார்,  அப்போது  நடிகர் விஜய் மீது அடுக்கடுக்கான விமர்சனங்களை முன்வைத்தார்.

[youtube-feed feed=1]