சென்னை: பாஜக தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகுவதாக பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை அறிவித்து உள்ளார். இது பாஜகவினர் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

 தமிழ்நாட்டில்  இன்னும் 3 மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. சட்டமன்ற தேர்தலையொட்டி, அதிமுக பாஜக தலைமையிலான கூட்டணியில் பல கட்சிகள் இணைந்துள்ளது. மேலும் தேமுதிகவை இழுக்க பேச்சுவார்ததை நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது.

அதன்படி,  சட்டசபை தேர்தலையொட்டி பா.ஜ.க.வில் தேர்தல் பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருந்தனர். இதில், மாநில பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையும் இடம் பெற்றிருந்தார். அவர்  6 தொகுதிகளுக்கு பொறுப்பாளராக  பா.ஜ.க. தலைமை நியமித்து இருந்தது. அதாவது கோவை மாவட்டத்தில், சிங்காநல்லூர், விருகம்பாக்கம் உள்ளிட்ட 6 தொகுதிகளுக்கு பாஜகவின் பொறுப்பாளராக அண்ணாமலையை நியமித்து கட்சி தலைமை உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், கட்சி தேர்தல் பொறுப்பில் இருந்து விலக விரும்புவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை,   தந்தையின் உடல்நிலையை கருத்தில் கொண்டு  தேர்தல் பொறுப்பில் இருந்து விலகுகிறேன்.  இதுதொடர்பாக மாநில தலைவர் நயினாரிடம்   கூறியுள்ளதாக தெரிவித்தார். மேலும், தேர்தலில் போட்டியிடுவது குறித்து காலமும், நேரமும் தான் முடிவு செய்யும் என்றார்.

மேலும் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் கூறியவர், ”பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஏற்றுக்கொண்ட 16-வது நிதிக்குழுவின் பரிந்துரை தமிழகம் பலன் அடைந்துள்ளது. ‘ குறிப்பாக வரி பகிர்வில் நாட்டின் வளர்ச்சிக்கு 10% நிதி ஒதுக்கீடு செய்யப்படுவது எதிர்கட்சிகளின் வாயை அடைத்துள்ளது.

தி.மு.க அமைச்சர்களை அழைத்து அண்ணாவை பற்றி 10 வரிகள் எழுதச் சொன்னால் யாருக்கும் எழுதத் தெரியாது. இன்றைக்குகூட தேர்வு வைத்து பாருங்கள் யாருக்கும் தெரியாது. அண்ணா… அண்ணா… என்று அவர் பிறந்தநாள், நினைவுநாளில் பேசுவதை மட்டுமே வாடிக்கையாக வைத்துள்ளனர்.

நடைபெற உள்ள சஅ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் தேர்தலை சந்திக்கப் போகிறோம். அவர்தான் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர். என்றும் உறுதி செய்தார்.

திமுக கூட்டணி குறித்த கேள்விக்கு, தி.மு.க – காங்கிரஸ் கூட்டணி உடைந்த கூட்டணி போன்றது என்று விமர்சித்தார்.

தவெகவின் அரசியல் நிலைப்பாடு குறித்த கேள்விக்கு பதில் கூறிய அண்ணாமலை, . விஜயை நான் தேவையில்லாமல் குற்றம் சொல்ல விரும்பவில்லை. எங்களிடம் டபுள் என்ஜின் இருக்கிறது. விஜய்யிடம் என்ஜினே இல்லை. விஜய் கட்சியின் என்ஜினை ஓட்ட யார் இருக்கிறார்? மக்களை சிந்திக்க வைக்கும் வகையில் விஜய்யின் பேச்சு இல்லை. விசில் மற்றும் கைதட்டலுக்காகவே விஜய்யின் பேச்சுகள் இருக்கின்றன என்றார்.

[youtube-feed feed=1]