சென்னை: வேலை நிறுத்தம் செய்யும் சங்கங்கள் பணிக்கு வராவிட்டால் சம்பளமில்லை  என தமிழ்நாடு அரசு அறிவித்த புதிய ஓய்வு ஊதிய திட்டத்தை எதிர்த்து போராட்டம் அறிவித்துள்ள ஆக்டோ ஜியோவுக்கு தலைமைச் செயலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள புதிய ஓய்வூ​தி​யத் திட்​டம்  குறித்து அதிருப்பித தெரிவித்து, அரசு ஊழியர்​கள் சங்​கங்​கள்  இணைந்து ஆக்டோ ஜியோ என்ற அமைப்பை உருவாக்கி உள்ளன. இவை, தமிழ்நாடு அரசுக்கு எதிராக வேலை நிறுத்​தம்  போராட்டம் அறி​வித்​துள்ளது.

இந்த நிலை​யில், பணிக்கு வரா​விட்​டால் சம்​பளமில்லை என தலை​மைச் செயலர் நா.​முரு​கானந்​தம் அறி​வித்​துள்​ளார்.

தமிழக அரசு ஊழியர்​கள், ஆசிரியர்​கள் பழைய ஓய்​வூ​தி​யம் உள்​ளிட்ட கோரிக்​கைகளை வலி​யுறுத்தி 20 ஆண்​டு​களுக்​கும் மேலாக போராட்​டம் நடத்தி வந்த நிலை​யில், சமீபத்​தில் தமிழக அரசு ‘டேப்​ஸ்’ எனப்​படும் உறு​தி​யளிக்​கப்​பட்ட ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை அறி​வித்​தது. இதில் பல்​வேறு சந்​தேகங்​கள் எழுப்​பப்​பட்ட நிலை​யில், ஓய்​வு​பெறும் சூழலில் பங்​களிப்பு அல்​லது உறு​தி​யளிக்​கப்​பட்ட ஓய்​வூ​திய திட்​டத்​தில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்​ய​லாம் என அரசாணை​யில் கூறப்​பட்​டது.

இருப்​பினும் தங்​களுக்கு பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டமே வேண்​டும் என்​று, பங்​களிப்பு ஓய்​வூ​தி​யத் திட்ட ஒழிப்பு இயக்​கம் உள்​ளிட்ட சில அமைப்​பு​கள் இணைந்து ஆக்டோ ஜியோ என்ற கூட்​டமைப்பை உரு​வாக்​கியதுடன், இன்று பிப்.3 முதல் கால​வரையற்ற போராட்​டத்​தை​யும் அறி​வித்​தது. மேலும் சில அமைப்​பு​கள் பிப்​.10 முதல் கால​வரையற்ற வேலை நிறுத்த போராட்​டத்தை அறிவித்துள்ளன.

இந்​த நிலை​யில்,   தலை​மைச் செயலர் நா.​முரு​கானந்​தம் அனைத்து துறை செயலர்​கள், துறைத் தலை​வர்​களுக்கு அனுப்​பிய சுற்​றறிக்​கை​யில், “அரசு ஊழியர்​களுக்​கான நடத்தை விதி​களை மீறு​வோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்​கப்​படும். அவர்​கள் பணிக்கு வரா​விட்​டால், வராத நாட்​களுக்கு சம்​பளம் இல்​லை. போராட்​டத்​தில் ஈடு​படு​வோருக்​கு, மருத்​துவ விடுப்பு தவிர்த்து தற்​செயல் விடுப்பு அல்​லது வேறு விடுப்​பு​கள் அனு​ம​திக்​கப்பட மாட்​டாது” என்று கூறப்​பட்​டுள்​ளது.

[youtube-feed feed=1]