சென்னை: ‘அண்ணா தமிழர்களின் மனசாட்சி’ – அண்ணா மறைந்தும் வாழ்ந்துகொண்டிருப்பதாகவும், அவர் மூட்டிய தீ பரவட்டும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இன்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரையின் நினைவுநாள். இதை முன்னிட்டு, ‘அண்ணா தமிழர்களின் மனசாட்சி’ என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
திராவிட முன்னேற்ற கழகத்தின் நிறுவனரான சி.என் அண்ணாதுரை தமிழ்நாட்டின் முதல் முதலமைச்சராவார். சிறந்த பேச்சாளர், எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளர் என பன்முகத் தன்மை கொண்ட இவர், திராவிட ஆட்சியை தோற்றுவித்ததோடு மட்டுமல்லாமல் மெட்ராஸ் மாநிலத்துக்கு ‘தமிழ்நாடு’ என்று பெயர்சூட்டினார். 1969ஆம் ஆண்டு பிப்ரவரி 3 -ம் தேதி தனது 59வது வயதில் புற்றுநோய் காரணமாக அண்ணா உயிர்நீத்தார். உலகமே வியக்கும்படி அப்போதே அவரது இறுதி ஊர்வலத்தில் பல லட்சம் பேர் பங்கேற்றனர்.
தமிழக மக்களிடையே அத்தகைய தாக்கத்தை ஏற்படுத்திய அண்ணாவால் தோற்றுவிக்கப்பட்ட கட்சியும், அண்ணா பெயரை கொண்ட கட்சியும் தான் தமிழ்நாட்டை பல தசாப்தங்களாக மாறி மாறி ஆண்டு வருகின்றன. இந்நிலையில் அண்ணாவின் 57வது நினைவு தினத்தில் மட்டுமல்ல, ஒவ்வொரு நாளும் அவரை நினைவுகூறுவதாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பேரறிஞர் அண்ணா தமிழர்களின் மனசாட்சி என்று குறிப்பிட்டுள்ள அவருடைய பதிவில், “நினைவுநாளில் மட்டுமல்ல, ஒவ்வொரு நாளும் அண்ணனை நினைக்கும் நாள்தான் எங்களுக்கு!
[youtube-feed feed=1]