சென்னை: சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழ் நாடு உள்ளதாக உலகளாவிய சுற்றுலா உச்சி மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றிய தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார்.

மாமல்லபுரத்தில் தமிழ் நாடு உலகளாவிய சுற்றுலா உச்சி மாநாடு 2026 இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், உச்சி மாநாட்டைத் தொடங்கி வைத்தார்.
இதையடுத்து, சுற்றுலாத்துறை சார்பில் மாநிலம் முழுவதும் 48 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பில் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட சுற்றுலா மேம்பாட்டு பணிகளை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். தொடர்ந்து, முதலமைச்சர் முன்னிலையில் சுற்றுலாத்துறை சார்பில் ரூ.22,794 கோடி மதிப்பில் 127 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
இதையடுத்து நிகழ்ச்சியில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின்,
மனிதர்களான இன்றைக்கு நாம் பண்பாட்டு ரீதியாக முன்னேறிக்கிறோம். அதற்கு மனித சமுதாயத்தோட பயணங்கள் மிக முக்கியமானது. இந்தப் பயணங்கள் நமக்கு ஏராளத்தை கற்றுக் கொடுத்திருக்கிறது. பயணங்கள் என்பது புத்தகம் இல்லாத வகுப்பறை. அப்படிப்பட்ட பயணங்களை ஊக்குவிக்க சுற்றுலா பயணிகளின் அனுபவங்களை மேம்படுத்த இந்த உலக அளவையே உச்சி மாநாடு உறுதுணையாக இருக்கும் என நான் நம்புகிறேன்.
இப்படிப்பட்ட சுற்றுலா மாநாடு தமிழ்நாட்டில் முதல்முறையாக நடப்பது நமக்கெல்லாம் மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் சேர்க்கிறது. அதே சமயம் கூடுதல் பொறுப்புணர்வையும் கொடுக்கிறது.
பயணங்கள் புத்தகம் இல்லாத வகுப்பறை. சுற்றுலா மாநாடு முதல்முறையாக தமிழ்நாட்டில் நடப்பது மகிழ்ச்சியையும் பெருமையையும் சேர்க்கிறது. Arenaone நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.1,400 கோடி முதலீடு செய்வதன் மூலம் 2,100 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். Mata Amritanandamayi Mandir Trust நிறுவனம் செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.3,000 கோடி முதலீடு செய்கிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.3,000 கோடி முதலீட்டில் Hentage Theme Park அமைகிறது; 12,000 பேருக்கு வேலை கிடைக்கும்.
பண்பாட்டு ரீதியாக முன்னேறி இருக்க மனித சமுதாயத்தின் பயணங்கள் மிக முக்கியமானவை. உணவு, கல்வி, வணிக தேவைக்காக நாடுகளை பிடிப்பதற்காக என மனிதர்களின் எல்லா பயணங்களுக்கும் ஏதோ ஒரு நோக்கம். தமிழின் அருமை, எங்கள் நாகரிகத்தின் தொன்மை குறித்து உலகில் அனைவருக்கும் தெரியும். மெரினா கடற்கரை தொடங்கி குமரி வள்ளுவர் சிலை வரை தமிழ்நாட்டில் ஏராளமான சுற்றுலா இடங்கள் உள்ளன.
கரகாட்டம், காவடியாட்டம் என ஏராளமான கலைகள் தமிழ்நாட்டில் உள்ளன. கரகாட்டம், காவடியாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், தெருக்கூத்து, தப்பாட்டம் என ஏராளமான கலைகள் உள்ளன. ஏறுதழுவுதல் விளையாட்டு சர்வதேச சுற்றுலா பயணிகளை ஈர்த்துள்ளது. கலைகள், கலைஞர்கள், பண்பாட்டை உலக அளவில் கொண்டு செல்லும் வலிமை சுற்றுலாத்துறைக்குதான் உண்டு.

கீழடி அருங்காட்சியகம், பொருநை அருங்காட்சியகம், கலைஞர் ஏறுதழுவுதல் அரங்கம், திருவள்ளுவர் சிலைக்கு கண்ணாடி பாலம். ரூ.14 கோடி ஒதுக்கி பிச்சாவரம் படகு இல்லத்தை மேம்படுத்திக் கொண்டிருக்கிறோம். ஏற்காட்டில் உள்கட்டமைப்பை மேம்படுத்தி வருகிறோம். ஏற்காடு உள்ளிட்ட பிற சுற்றுலா தலங்களையும் மேம்படுத்தி வருகிறோம். 5 ஆண்டுகளில் சுற்றுலாத் துறையில் ரூ.612.18 கோடி ஒதுக்கியுள்ளோம்.
தமிழ்நாட்டை நோக்கி சுற்றுலாப் பயணிகள் ஏராளமாக வர நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 128 லட்சம் உள்நாட்டு சுற்றுலா பயணிகள், 45 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தமிழ்நாட்டுக்கு வந்துள்ளனர். சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பான இடமாக தமிழ்நாடு உள்ளது. ஆன்மிக சுற்றுலா, மருத்துவ சுற்றுலா உள்ளிட்ட 12 வகையான முன்னுரிமை சுற்றுலாக்கள் தமிழ்நாட்டில் உள்ளன. அனைத்து தகுதியான சுற்றுலா திட்டங்களுக்கும் ஒற்றை சாளர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மாம்பல்லபுரத்தில் சிறப்பு பகுதி மேம்பாடு ஆணையம் அமைத்து ரூ.100 கோடியில் நவீன சுற்றுலா உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்படுகின்றன. நாட்டிலேயே சிறந்த சுற்றுலா தலமாக தமிழ்நாட்டை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இ
கடந்த ஐந்து ஆண்டுகளில் சுற்றுலாத்துறை மேம்பாட்டிற்காக 612 கோடியே 18 லட்சம் ரூபாய் ஒதுக்கி இருக்கிறோம். இதனால் கடந்த ஐந்து ஆண்டுகளில் 128 கோடியே 97 லட்சம் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளும், சுமார் 47 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் தமிழகத்திற்கு வருகை புரிந்துள்ளனர். ஆனால் இது போதாது தமிழ்நாட்டை நோக்கி இன்னும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வரவேண்டும்.
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதற்கு ஏற்ப உலகத்தில் உள்ள அத்தனை மக்களையும் உறவினர் உறவினர்களாக நினைத்து அன்போடும் நட்போடும் பழகக் கூடியவர்கள் தான் தமிழ்நாட்டு மக்கள். அதனால் வெளிமாநில மக்களும் வெளிநாடு மக்களும் தமிழ்நாட்டிற்கு வர வேண்டும்.
இங்கு சிறப்பான போக்குவரத்து வசதி உள்ளது. சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பான மாநிலமாக உள்ளது. சாகச சுற்றுலா, பொழுதுபோக்கு சுற்றுலா, கேரவன் சுற்றுலா, கிராமிய சுற்றுலா, கடலோர சுற்றுலா, பண்பாட்டு சுற்றுலா, மருத்துவம் மற்றும் உடல்நலம் பேணும் சுற்றுலா, ஆன்மீக சுற்றுலா, பாரம்பரிய சுற்றுலா, திரைப்பட சுற்றுலா என 12 முன்னுரிமை சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்த தமிழ்நாடு சுற்றுலா கொள்கை 2003 வெளியிட்டு இருக்கிறோம்.
சுற்றுலாத்துறையில் தனியார் முதலீட்டை ஊக்குவிப்பதற்கு சுற்றுலாவை சேர்ந்த 13 தகுதியான திட்டங்களை தேர்ந்தெடுத்து இருக்கிறோம். நிறுவனங்களோட முதலீட்டு திட்டங்களின் அடிப்படையில் மூன்று வகையாக வகைப்படுத்தி முதலீட்டு மானியம், கூடுதல் முதலீட்டு மானியம், கட்டமைப்பு ஊக்கத்தொகை மற்றும் மின் பயன்பாட்டில் கட்டண சலுகை வழங்கப்படும். இதையெல்லாம் உலக அளவில் கொண்டு செல்ல இந்த சுற்றுலா உச்சி மாநாடு நிச்சயம் துணை நிற்கும்.
இவ்வாறு கூறினார்.
[youtube-feed feed=1]