மதுரை: திருப்​பரங்​குன்​றம் கார்த்​திகை தீப வழக்​கில் உயர் நீதி​மன்​றம் பிறப்​பித்த உத்​தரவை நிறைவேற்​றாத ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரி​கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளது. இந்த மனு ஓரிரு நாளில் விசாரணைக்கு வர உள்ளது.

திருப்​பரங்​குன்​றம் மலை உச்​சி​யில் உள்ள தீபத்​தூணில் கார்த்​திகை தீபம் ஏற்ற வேண்​டும் என இந்துஅமைப்பு தலைவர் ராம.ரவிக்​கு​மார், அரச​ பாண்டி ஆகியோர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்​.சு​வாமிநாதன், இதுதொடர்பாக மலை உச்சிக்கு சென்று ஆய்வு நடத்தியதுடன், பல்வேறு ஆவணங்களையும் ஆய்வு செய்து. மலை உச்சியில் தீபம் ஏற்ற உத்​தர​விட்​டார்.

ஆனால், திமுக அரசை நீதிமன்ற உத்தரவை மதிக்கவில்லை. மேலும் காவல்துறையை குவித்து வேண்டத்தகாத வகையில், பதற்றத்தை உருவாக்கி சலசலப்பை ஏற்படுத்தியது. இதனால் மதுரை பகுதியில் பதற்றம் உருவானது. மேலும் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற அனுமதிக்கவில்லை.  இந்த உத்​தரவு நிறைவேற்​றப்​ப​டாத நிலை​யில், மறு​நாள் மத்​திய தொழில​கப் பாது​காப்பு படை​யினர் பாது​காப்​புடன் மனு​தா​ரர்​கள் தீபம் ஏற்ற நீதிபதி மீண்டும் உத்​தர​விட்​டார். ஆனால் அதையும் திமுக அரசு தடை செய்தது. அதன்​படி தீபம் ஏற்​றச் சென்ற மனு​தா​ரர்​கள், திருப்​பரங்​குன்​றத்​தில் 144 தடை​யாணை அமலில் இருப்​ப​தாகக் கூறி திருப்பி அனுப்​பப்​பட்​டனர். பின்​னர் 144 தடை​யாணையை ரத்து செய்து உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டது. அதன் பிறகும் தீபத்​தூணில் தீபம் ஏற்​றப்​பட​வில்​லை.

இது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக திமுக அரசை நீதிமன்றம் கடுமையாக சாடியது. இதையடுத்து நீதிமனற உத்தரவை நிறைவேற்றாத ஆட்சியர், காவல்துறை தலைவர், தலைமை செயலாளர்கமீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நடைபெற்று வருகிறது.

இந்​த நிலை​யில், திருப்​பரங்​குன்​றம் விவ​காரத்​தில் திமுக அரசின் அடிமைகளாக செயல்பட்டு, நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றாததால், தொடர் நீதி​மன்ற அவம​திப்பு புரிந்​த​தாகக் கூறி மதுரை ஆட்​சி​யர் பிர​வீன்​கு​மார், மாநகர காவல் ஆணை​யர் லோக​நாதன், திருப்​பரங்​குன்​றம் கோயில் செயல் அலு​வலர் யக்ன நாராயணன், துணை காவல் ஆணை​யர் இனிகோ திவ்​யன், ஏடிஜிபி டேவிட்​சன் தேவாசிர்​வாதம் ஆகியோர் மீது நீதி​மன்ற அவம​திப்பு நடவடிக்கை மேற்​கொள்​ளக் கோரி மனு​தா​ரர்​களில் ஒரு​வ​ரான அரச ​பாண்டி தரப்​பில் புதி​தாக மனு தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளது

அந்த மனு​வில், “நீ​தி​மன்ற உத்​தரவை செயல்​படுத்​தாமல் அவம​திப்பு செய்​ததற்​காக, ஐஏஎஸ், ஐபிஎஸ் அதி​காரி​கள் மீது அகில இந்​தி​யப்பணி விதிகள் (நடத்​தை) 1968-ல் அடிப்​படை​யில் துறை ரீதி​யான மற்​றும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மத்​திய உள்​துறைச் செயலருக்கு உத்​தர​விட வேண்​டும்” என்று கூறப்​பட்​டுள்​ளது.

இந்த மனு விரை​வில் விசா​ரணைக்கு வர வாய்ப்​புள்​ளது.

[youtube-feed feed=1]