சென்னை: தவெகவின் 3ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி, அக்கட்சியின் தலைவர் விஜய், கட்சி அலுவலகத்தில் உள்ள  தலைவர்களின் சிலைகளுக்கு மரியாதை செய்ததுடன், கட்சி கொடியேற்றினார். இதையொட்டி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  நடை பெற உள்ள சட்டமன்ற தேர்தலில் வெற்றிவாகை சூடி ஆட்சி அமைப்போம் என சூளுரைத்துள்ளார்.

தவெகவின் 3ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி அக்கட்சியின் தலைவர் விஜய், கட்சி தலைமை அலுவலமான  பனையூரில் கட்சியின் கொள்கைத் தலைவர்களுக்கு மலர் தூவி அக்கட்சித் தலைவர் விஜய் மரியாதை செலுத்தினார்.  அதன்படி,  அஞ்சலையம்மாள், வேலுநாச்சியார், அம்பேத்கர், பெரியார், காமராஜர் சிலைகளுக்கு அவர் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கட்சிக் கொடியையும் அவர் ஏற்றி வைத்தார். இதனைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. அனைத்து கட்சிகளும் கூட்டணி, தொகுதி பங்கீடு என விறுவிறுப்பான பேசி வரும் நிலையில், மற்றொருபுறம், விருப்ப மனுக்கள் பெறுதல், நேர்காணல், வாக்குறுதிகள் கள நிலவரம்  தகதகவென தகிக்க தொடங்கி உள்ளது. இநத் ஆண்டு நடைபெற உள்ள தேர்தல், 4 முனை போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் தவெக கட்சியின் 3 ஆம் ஆண்டு தொடக்க விழா பனையூர் தவெக அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.

முன்னதாக,  தமிழ்நாடு அரசியலில் காலடி எடுத்து வைத்துள்ள தவெக தலைவர் விஜய்,  திமுகவை அரசியல் எதிரியாகவும், பாஜகவை கொள்கை எதிரியாகவும் கூறி ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று அறிவித்த அதிரடியாக அரசியலில் என்ட்ரி கொடுத்தார் தவெக தலைவர் விஜய். ஜனநாயகன் படத்துடன் சினிமாவில் இருந்து விலகி முழு நேர அரசியலில் ஈடுபட போவதாகவும் அவர் கூறியிருந்தார். அதைத்தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் மக்கள் சந்திப்பு நடத்தி, ஆதரவு திரட்டி வந்தார். இந்த சம்பவத்தில் மக்கள் கூட்டம் அலை மோதியது. அதுவே கடந்த 2025ம் ஆண்டு செட்பம்ர் மாதம் கரூர் பகுரிதயில் நடைபெற்ற கூட்டத்தில்   எதிர்பாராத விதமாக கூட்ட நெரிசலில் சிக்கி அப்பாவி மக்கள் 41 பேர் உயிரிழந்தனர். இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக, சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

இதற்கிடையில் அரசியல் கட்சிகளை விமர்சித்து அவர் நடித்த   ஜனநாயகன் படம் வெளியிடநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனால், மிகுந்த நெருக்கடியில் உள்ள விஜய்,  இன்று தனது கட்சியின் 3வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி, தனது பனையூர் தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

 இதுதொடர்பாக பதிவிட்டுள்ள அக்கட்சி தலைவர் விஜய், ஆட்சியை கைப்பற்றுவதற்கான வேலைகளில் தீவிரம் காட்டுவோம் என்று பதிவிட்டுள்ளார்.

‘என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு, வணக்கம். நம் உயிரனைய இயக்கமான தமிழக வெற்றிக் கழகத்தின் மகிழ்ச்சிகரமான மூன்றாம் ஆண்டு, இன்று தொடங்குகிறது. இரண்டு ஆண்டுகளை இயல்பாகவும், இயல்பு தாண்டியும் நிறைவு செய்து, நீள்கிறது நம் அரசியல் பெரும்பயணம்.

முதன்மை அரசியல் சக்தியாகப் பரிணமிக்கும் முன்பே மக்கள் இயக்கமாக, மக்களோடு மக்களாகக் கலந்து நின்றவர்கள் நாம். இதை நாடறியும். நல்லவர்கள் அறிவார்கள். ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்லலாம். சலனங்களைப் புறந்தள்ளி, சமநிலை தவறாத, அளக்கவியலாத ஆழ்கடல் த.வெ.க.; எவராலும் விலக்க இயலாத விரிவானம் த.வெ.க.; அத்தனை இலக்குகளையும் அர்ப்பணிப்புடன் வெல்லும், சாமானிய மக்களுக்கான அதிகார அரசியலின் வெற்றிப் போர்முரசம் த.வெ.க. 2026 சட்டமன்றத் தேர்தல் களம், இதுவரை இல்லாத புதிய சூழலைச் சுமந்து நிற்கிறது. இதற்கு ஒரே காரணம் நமது அரசியல் வருகை மட்டுமே என எல்லோரும் சொல்கின்றனர்.

எனவே இச்சூழலில், களத்தை நமதாக்கி, தேர்ந்த தெளிவுடனும் திறன்மிக்க நுட்பத்துடனும் தேர்தல் அரசியல் வெற்றியின் வாயிலாக, அதிகார அரசியல் அங்கீகாரம் நோக்கிச் செல்வோம். அனைத்து மக்களின் அமோக ஆதரவுடன், தீர்க்கமுடன் ஒற்றுமையாகக் களமாடி, ஆட்சி பீடத்தைக் கைக்கொள்ளும் ஜனநாயக இலக்கை உறுதியாக வெல்வோம். நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்.

இவ்வாறு கூறி உள்ளார்.

[youtube-feed feed=1]