சென்னை:  அரசுப் பதவிகளுக்கு புதியதாக விண்ணப்பிப்பவர்களுக்கே தமிழ் வழியில் கல்வி பயின்றதற்கான முன்னுரிமை  வழங்கும் வகையிலான தமிழ்நாடு அரசின் சட்ட முன்வடிவு இன்றைய பேரவை அமர்வில்  நிறைவேற்றப்பட்டது.

தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு அரசு வேலையில் 20% முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என கடந்த ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை ஏற்று தமிழ்நாடு அரசும் அரசாணை வெளியிட்டது.

இதைத்தொடர்ந்த,  நீதிமன்ற உத்தரவுப்படி, அரசுப் பதவிகளுக்கு புதியதாக விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமே தமிழ் வழியில் கல்வி பயின்றதற்கான முன்னுரிமை வழங்கப்படும் என்பதை உறுதி செய்யும் சட்டமுன்வடிவு சட்டப்பேரவையில்  தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட முன்வடிவு இன்று பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இதன்மூலம் ஏற்கனவே அரசுப் பணியில் இருப்பவர்கள் குறிப்பிட்ட காலிப்பணியிடங்களுக்கு மட்டுமே அத்தகைய முன்னுரிமையை பெற விண்ணப்பிக்க முடியும்.

தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு அரசு வேலையில் 20% முன்னுரிமை! அரசாணை வெளியீடு

[youtube-feed feed=1]