
தமிழ்நாட்டில் இன்னும் 3 மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலிலும் திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணியில் உள்ளது. இருந்தாலும் சமிப காலமாக ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்ற குரல் காங்கிரஸ் உள்பட கூட்டணி கட்சிகளிடையே ஒலிக்கத் தொடங்கி உள்ளது. இந்த சலசலப்புக்கு மத்தியில், காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி தவெக தலைவர் விஜயை சந்தித்து பேசியது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் தமிழ்நாடு கடன் விஷயத்திலும், பிரவீண் சக்கரவர்த்தி மீண்டும் திமுக அரசை சாடியது, கூட்டணிக்குள் குழப்பத்தை உருவாக்கியது.
இதையடுத்து, தீவிர திமுக ஆதரவாளர்களான காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர், பிரவீண் சக்கரவர்த்திக்கு எதிராக கருத்து தெரிவித்தனர். பல்வேறு வழக்குகளில் சிக்கியிருக்கும் மாநில காங்கிரஸ் மாநில தலைவர் செல்வபெருந்தகையும், திமுகவுக்கு ஆதரவாகவும், பிரவீண் சக்கரவர்த்திக்கு எதிராகவும் கருத்து தெரிவித்திருந்தார். ஆனால் மேலும் பலர் பிரவீனுக்கு ஆதரவாக பேசி வருகின்றனர். இதனால் திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்குமா என்பது கேள்விக்குறியாகி வருகிறது.
இந்த நிலையில், அகில இந்திய காங்கிரஸ் தலைமை மற்றும் ராகுல்காந்தி உள்பட முக்கிய நிர்வாகிகள், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் இன்றுடெல்லியில் ஆலோசனை நடத்துகிறது.
