சென்னை: நாகர்கோவில், திருச்சி, தாம்பரம் பகுதிகளில் இருந்து 3 புதிய அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ரயில்6கள்
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் ஈரோட்டில் இருந்து ஆந்திரா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், உத்தரப்பிரதேசம் மாநிலங்கள் வழியாக பீகார் மாநிலத்தின் ஜோக்பானிக்கு ஒரு அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தாம்பரம், திருச்சி, நாகர்கோவிலிலிருந்து 3 புதிய அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

இந்திய ரயில்வே துறையை நவீனப்படுத்தும் முயற்சிகளில் மத்திய அரசு தீவிரமாக இறங்கி உள்ளது. புதிய ரயில் நிலையங்கள் அமைத்தல், பழைய ரயில் நிலையங்களை நவீன வசதிகளுடன் மேம்படுத்துதல், புதிய ரயில்கள் அறிமுகப்படுத்துதல், ரயில் பெட்டிகளில் வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன. அந்த வகையில் பயணிகளின் வசதிக்காக இந்திய ரயில்வே அறிமுகப்படுத்திய வந்தே பாரத் ரயில் சேவைக்கு நல்ல வரவேற்பு கிடைத்த கிடைத்ததை அடுத்த தற்போது ஸ்லீப்பர் வந்தே பாரத் சேவைகளை அறிமுகப்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மத்தியஅரசு கடந்த 2023 ஆம் ஆண்டு முதல், 800 கிலோ மீட்டருக்கும் மேல் பயண தூரம் கொண்ட நகரங்களை இணைக்கும் வகையில் ஏசி வசதி அல்லாத, குறைந்த கட்டணம் கொண்ட ஸ்லீப்பர் மற்றும் முன்பதிவு இல்லாத பெட்டிகளை உள்ளடக்கிய அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றன.
நாடு முழுவதும் தற்போது 15 அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயங்கி வருகின்றன. விரைவில் இந்த எண்ணிக்கையை 24 ஆக உயர்த்த ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது. இந்த ரயில்களில் 10 ஸ்லீப்பர் முன்பதிவு பெட்டிகளும், 10 முன்பதிவு இல்லாத பெட்டிகளுடன் சேர்த்து மொத்தம் 22 பெட்டிகளை கொண்டதாக உள்ளன.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் ஈரோட்டில் இருந்து ஆந்திரா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், உத்தரப்பிரதேசம் மாநிலங்கள் வழியாக பீகார் மாநிலத்தின் ஜோக்பானிக்கு ஒரு அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தாம்பரத்திலிருந்து மேற்கு வங்க மாநிலத்தின் ஹவுரா மாவட்டத்தில் உள்ள சந்த்ராகாச்சி (கொல்கத்தா), திருச்சி மற்றும் நாகர்கோவிலில் இருந்து மேற்கு வங்க மாநிலத்தின் சிலிகுரி அருகே உள்ள நியூஜல்பைகுரி நகருக்கு என மொத்தம் 3 புதிய அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்கப் போவதாக ரயில்வேதுறை அறிவித்துள்ளது. இந்த ரயில்கள் ஓரிரு நாட்களில் சேவையை தொடங்க உள்ளது.
தாம்பரம் – சந்த்ராகாச்சி (கொல்கத்தா) – 16107/16108
இதில் தாம்பரம் – சந்த்ராகாச்சி (கொல்கத்தா) வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் தாம்பரத்திலிருந்து (ரயில் எண் : 16107) ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 8.15 மணி அளவில் சந்த்ராகாச்சி ரயில் நிலையத்தை சென்றடையும். இதே போல மறுமார்க்கத்தில் சந்த்ராகாச்சியில் (ரயில் எண் : 16108) இருந்து ஒவ்வொரு சனிக்கிழமையும் இரவு 11:55 மணிக்கு புறப்படும் ரயிலானது திங்கட்கிழமை காலை 10 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும்.
நாகர்கோவில் – நியூஜல்பைகுரி (20604/20603)
இதே போல நாகர்கோவிலில் (ரயில் எண் : 20604) இருந்து ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இரவு 11 மணிக்கு புறப்படும் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலானது புதன்கிழமை காலை 5 மணிக்கு நியூஜல்பைகுரியை சென்றடையும்.
இதேபோல ஒவ்வொரு புதன்கிழமை மாலை 4.45 மணிக்கு நியூஜல்பைகுரியில் (ரயில் எண் : 20603) இருந்து புறப்படும் ரயிலானது வெள்ளிக்கிழமை இரவு 11 மணிக்கு நாகர்கோயிலை வந்தடையும்.
திருச்சி – நியூஜல்பைகுரி (20610/20609)
இதேபோல திருச்சியிலிருந்து (ரயில் எண் : 20610) ஒவ்வொரு புதன்கிழமை காலை 5.45 மணிக்கு புறப்படும் அம்ரித் பாரத் ரயிலானது, வெள்ளிக்கிழமை காலை 5 மணிக்கு நியூஜல்பைகுரியை சென்றடையும். மறு மார்க்கத்தில் நியூஜல்பைகுரியிலிருந்து (ரயில் எண் : 20609) ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மாலை 4.45 மணிக்கு புறப்படும் ரயில் ஆனது ஞாயிற்றுக்கிழமை மாலை 4:15 மணியளவில் திருச்சியை வந்தடையும்.
திருச்சியில் இருந்து நியூஜல்பைகுரிக்கு சுமார் 2,500 கிலோ மீட்டர் தூரம் பயணித்து செல்லும் இந்த ரயில் மொத்தம் 38 ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]