சென்னை: தமிழ்நாட்டில் 5 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனார். டாஸ்மாக் தலைவர் விசாகன், இன்னசென்ட் திவ்யா ஐஏஎஸ் உள்பட அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

இதுகுறித்து தலைமைச்செயலர் முருகானந்தம் வெளியிட்ட அறிவிப்பில், றப்புத் திட்டச் செயலாக்கத்துறை செயலர் ச உமா, மக்கள் நல்வாழ்வு துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சுற்றுலா வளர்ச்சிக் கழக ஆணையர் இன்னசென்ட் திவ்யா தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழக ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ச. உமா ஐஏஎஸ்: சிறப்புத் திட்டச் செயலாக்கத்துறை செயலர் ச உமா, மக்கள் நல்வாழ்வு துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ரத்னா ஐஏஎஸ்: ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் செயலாளர் ரத்னா வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சித்துறை கூடுதல் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
விசாகன் ஐஏஎஸ்: தொழில்நுட்ப கல்வி இயக்குனராக விசாகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கிறிஸ்துராஜ் ஐஏஎஸ்: டாஸ்மாக் மேலாண்மை இயக்குனராக கிறிஸ்துராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இன்னசென்ட் திவ்யா ஐஏஎஸ்: சுற்றுலா வளர்ச்சிக் கழக ஆணையர் இன்னசெண்ட் திவ்யா தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழக ஆணையராக நியமனம்
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.