சென்னை: கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் பிரபல ரவுடி பொதுமக்கள் முன்னிலையில் ஓடஓட விரட்டி வெட்டிக்கொலை செயயப்பட்ட சம்பவம் சென்னையில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
மாநில தலைநகர் சென்னையில் குற்றச்சம்பவம் குறைந்துள்ளது என காவல்ஆணையர் அருண் பேட்டி அளித்த ஒரு வாரத்திற்குள் நோயாளிகள் கூட்டம் அதிகம் உள்ள அரசு மருத்துவமனைக்குள் ஒருவர் கும்பலால் ஓடஓட வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம், நோயாளிகளையும், பொதுமக்களையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் கொலை செய்யப்பட்ட நபர். சென்னை கொளத்தூர் ராஜமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ஆதி என்கிற ஆதி கேசவன் என்பது தெரிய வந்துள்ளது. பிரபல ரவுடியான ஆதி மீது கொளத்தூர், ராஜமங்கலம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவரது மனைவி பிரசவத்திற்காக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அண்மையில் அனுமதிக்கப்படிருந்தநிலையில், அவரை காண இன்று அதிகாலை மருத்துவமனை வந்த ஆதி, அவரை பார்த்து நலம் விசாரித்து விட்டு, மருத்துவமனை வளாகத்தில் உள்ள புதிய கட்டடத்தின் பின்புறம் தி நின்று கொண்டு யாரிடமே பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது திடீரென தலைக்கவசம் அணிந்தபடி அங்கு வந்த4 பேர் அடங்கிய கும்பல் ஆதி கேசவனை தாக்க வந்தது. அவர் உடனே சுதாரித்துக்கொணடு, அங்கிருந்து ஓடிய நிலையில், அவரை விரட்டி சென்ற கும்பல், மருத்துவமனை வளாகத்துக்கு உள்ளேயே, பொதுமக்கள் முன்னிலையில், அவரை வெட்டிக் கொலை செய்தது. பின்னர் அவர் இறந்ததை உறுதி செய்த அந்த கும்பல், அங்கிருந்து தப்பிச் சென்றது. இந்த கொலை சம்பவத்தை நேரில் பார்த்த நோயாளிகள், பொது மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.
இதுகுறித்து தகவலறிந்த கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் உள்ள காவலர்கள், உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று ஆதியின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த கீழ்பாக்கம் போலீசார், சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
[youtube-feed feed=1]