சென்னை: தமிழ்நாட்டில் எங்கள் கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை – ஒபிஎஸ், சசிகலாவுக்கு இடமில்லை டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துவிட்டு சென்னை திரும்பிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.

உள்துறை அமைச்சர் இரண்டு தமிழ்நாட்டில் முகாமிட்டிருந்தபோது சந்தித்து பேசாத அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, அமித்ஷா டெல்லி சென்ற பிறகு, அங்கு சென்று எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து பேசினார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், அதிமுக கூட்டணியில் ஒபிஎஸ், சசிகலா, டிடிவி அணிகள் இணைய வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் பரவின.
இந்த நிலையில், இன்று காலை சென்னை திரும்பி இபிஎஸ், அமித்ஷாவை டெல்லியில் சந்தித்தது ஏன்? என்பது குறித்த விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
அண்மையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புதுக்கோட்டைக்கு வந்தபோது அவரை சந்திக்க முடியாததால் டெல்லியில் சென்று சந்தித்தேன். கள்ளக்குறிச்சி, சேலத்தில் அதிமுக பொதுக்கூட்டம் இருந்ததால் அமித் ஷாவை நேரில் சந்திக்க முடியவில்லை என்றவர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை என்றவர், ஆனால், அவர் தமிழ்நாட்டின் அரசியல் சூழல் குறித்து என்னிடம் கேட்டறிந்தார். என்றார்.
அப்போது செய்தியாளர்கள் கூட்டணி குறித்து எடப்பாடியிடம் கேள்வி எழுப்பினர், அதற்கு பதில் கூறியவர், யாருடன் கூட்டணி பேச்சுவார்த்தை என வெளிப்படையாக பேச முடியாது. ரகசியமாக இருந்தால்தான் அரசியல் கட்சிக்கு அந்தஸ்து உண்டு.
தமிழகத்தில் எங்கள் கூட்டணிக்கு நாங்கள்தான் தலைமை. ஓபிஎஸ், சசிகலாவுக்கு அதிமுகவில் இடமில்லை என ஏற்கெனவே தெளிவுபடுத்திவிட்டேன். அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தலையிட மாட்டோம் என அமித் ஷா ஏற்கெனவே கூறிவிட்டார். தொடர்ந்து அப்படிதான் இருக்கிறது” என்றார்.
தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றிபெற்றால், டெல்லியில் இருந்து ஆட்சி நடக்கும் என முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளது குறித்த கேள்விக்கு பதில் கூறிய எடப்பாடி, அ.தி.மு.க தான் கூட்டணிக்கு தலைமை, அதனால், டெல்லியில் இருந்து ஆட்சி நடத்த முடியாது, கூட்டணி என்பது அந்தந்த சூழலுக்கு ஏற்றவாறு அமைவது. பா.ஜ.க.வுடன், திமுக கூட்டணி வைத்தபோது டெல்லியில் இருந்துதான் ஆட்சி நடத்தப்பட்டதா?, பா.ஜ.க.வை மதவாத கட்சி என கூறும் திமுக எப்படி, பாஜகவுடன் கூட்டணியில் இருந்தது?” என்னுடைய ஆட்சியில் எவ்வித தவறையும் கூற முடியாது என இ.பி.எஸ். கூறியுள்ளார்.
அதிமுக கூட்டணியில் டிடிவி தினகரன் இணைவாரா? என்ற கேள்விக்கு, இபிஎஸ் மறுப்பு தெரிவிக்கவில்லை. (அமமுக தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற வாய்ப்பு இருப்பதாக நம்பப்படுகிறது.) மேலும், “ஒரு சில கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கிறது. அதை வெளிப்படையாக சொல்ல முடியாது. கூட்டணி முழுமையடைந்த பின்பே தொகுதிப்பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெறும் என்று கூறியுள்ளார்.
தமிழ்நாட்டுக்கு அமித்ஷா வந்தபோது ஏன் சந்திக்கவில்லை என்ற கேள்விக்கு, அமித்ஷா தமிழகம் வந்தப்போ கள்ளக்குறிச்சி, சேலத்துல எனக்கு மீட்டிங் இருந்துச்சு. அதனால டெல்லில சந்திச்சு பேசினேன். கூட்டணி பத்திலாம் பேசல. தமிழ்நாட்டுல நிலவும் அரசியல் நிலவரம் பத்தி அவர் கேட்டார் என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசியவர், 2026-ம் ஆண்டு தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணியே வெற்றி பெறும். எங்கள் கூட்டணி வெற்றி கூட்டணியாக அமையும். திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதற்காக வலிமையான கூட்டணியை அமைத்துள்ளோம் என்றவர், பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றுவேன் என்று திமுக வாக்குறுதி கொடுத்தது. ஆனால், அவர்கள் போராட்டத்தை கையில் எடுத்தவுடன் புதிதாக ஒரு ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்து அரசு ஊழியர்களை ஏமாற்றியுள்ளது.
மத்திய அரசின் ஓய்வூதியத் திட்டத்துக்கும், தமிழக அரசு ஓய்வூதியத் திட்டத்துக்கும் எந்த வேறுபாடும் இல்லை. பெயரை மட்டுமே மாற்றியிருக்கிறார்கள். உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின் மூலம் அரசு ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
[youtube-feed feed=1]