நாகர்கோவில்: சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் தேரோட்டத்தின்போதுர, இந்துக்களுக்கு எதிராக செயல்படும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுக்கு எதிராக அல்லேலூயா பாபு என இந்து அமைப்பை சேர்ந்தவர்களும், பொதுமக்களும் இணைந்து குரல் எழுப்பியதால், பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சேகர்பாபு அங்கிருந்து வெளியேறினார்.

குமரி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் தேரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேர் வடம்பிடித்து இழுத்தனர். தேர்த்திருவிழாவில், கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமின்றி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களிலிருந்தும், கேரள மாநிலத்திலிருந்தும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேர்வடம் பிடித்து இழுத்தனர். திருவிழாவை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை (ஜன.2) கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த தேரோட்டத்தை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்த அமைச்சர் சேகர்பாபுக்கு எதிராக பொதுமக்கள் மற்றும் இந்து அமைப்புகளை சேர்ந்த ஏராளமானோர் குரல் எழுப்பினர். இதனால், அவர்களை பார்த்து முறைத்துபார்த்தவாறே சேகர்பாபு பதிலுக்கு பேசியதால், பதற்றம் ஏற்பட்டது. அவருக்கு எதிரான மேலும் குரல் ஒலிக்கத் தொடங்கியது. இதையடுத்து, காவல்துறையினர் பாதுகாப்புடன் சேகர்பாபுவும், மனோ தங்கராஜும் அங்கிருந்து வெளியேறினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
முன்னதாக, இக்கோயிலில், பிரமன், திருமால், சிவன் என மும்மூர்த்திகளும் அருள்புரிவதால், கோயிலில் ஆண்டு முழுவதும், பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்து செல்வார்கள். தாணுமாலய சுவாமி கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழிப் பெருந்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். நிகழாண்டு இத்திருவிழா, கடந்த டிச.25ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாள்களில் தினமும், காலை, மாலை வேளைகளில், சுவாமியும், அம்பாளும் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து, பக்தர்களுக்குக் காட்சி அளித்தனர் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம், வெள்ளிக்கிழமை (ஜன.2) காலை நடைபெற்றது. இதில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கலந்துகொண்டு தேர்வடம் தொட்டு இழுத்து தேரோட்டத்தைத் தொடக்கிவைத்தார்.
[youtube-feed feed=1]