சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக அரசுக்கு எதிர7க ஜனவரி 6-ஆம் தேதி மறியல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அங்கன்வாடி ஊழியர்கள் சங்கம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில பொதுச் செயலாளர் ராணி தலைமை தாங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, தமிழ்நாட்டில், அங்கன்வாடி ஊழியர்கள், சத்துணவு ஊழியர்களுக்கு பல ஆண்டுகளாக பதவி உயர்வு வழங்கப்படவில்லை.
அதனால், சத்துணவு ஊழியர்களுக்கு வழங்கப்படாத பணி உயர்வு மற்றும் பணி நிரந்தரம் ஊதிய உயர்வு, அதேபோன்று புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், காலியாக உள்ள இடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல முறை போராட்டம் நடத்தி வருகிறோம். ஆனால், எங்கள் கோரிக்கையை கேட்க தமிழ்நாடுஅரசு மறுத்து வருகிறது.அதனால், எங்களது கோரிக்கை தொடர்பாக பல கட்ட போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகிறோம். ஆனால், திமுக அரசு இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆகையால் எங்களுடைய கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக வரும் ஜனவரி 6 ஆம் தேதி மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும், இந்த போராட்டத்தில் 2000 க்கும் மேற்பட்ட சங்க உறுப்பினர்கள் கலந்து கொள்வார்கள் என்றவர், இதற்கு பிறகும், எங்கள் கோரிக்கை மீது மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால் எங்களுடைய அடுத்த கட்ட நிலைப்பாடு குறித்து அறிவிப்போம் எனத் தெரிவித்தார்.
[youtube-feed feed=1]