சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளிடையே கூட்டணி தொடர்பான குழப்பம் நீடித்து வரும் நிலையில்,  தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர்களை  காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி  விரைவில் சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகியும், ராகுலுக்கு நெருக்கமானவர் என்று சொல்லப்படும் பிரவீன் சக்ரவர்த்தி தவெக தலைவர் விஜயை சந்தித்து பேசியது தமிழ்நாட்டில் தொடர்ந்து வரும் திமுக காங்கிரஸ் கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும்  ஆட்சி அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேறி, தவெகவுடன் கூட்டணி வைக்க விரும்புவதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.  இதுபோன்ற நிகழ்வுகளால்,  திமுக தலைமை  காங்கிரஸ் கட்சி மீது மன வருத்ததில் இருந்து வருகிறது.

இதற்கிடையில்,  தமிழ்நாடு கடன் விஷயத்திலும், பிரவீண் சக்கரவர்த்தி மீண்டும் திமுக அரசை குற்றம் சாட்டியது, மேலும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, தீவிர திமுக ஆதரவாளர்களான  காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர்,  பிரவீண் சக்கரவர்த்திக்கு எதிராக கருத்து தெரிவித்தனர். பல்வேறு வழக்குகளில் சிக்கியிருக்கும் மாநில காங்கிரஸ் மாநில தலைவர் செல்வபெருந்தகையும், திமுகவுக்கு ஆதரவாகவும்,  பிரவீண் சக்கரவர்த்திக்கு எதிராகவும் கருத்து தெரிவித்திருந்தார்.

மேலும், திமுக தலைமையிலான மதசார்பற்ற கட்சிகளின் தலைவர்களும், பிரவீண் சக்ரவர்த்தியை கடுமையாக சாடினர். இதையடுத்து, காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி விவகாரங்களில் கூட்டணி கட்சிகள் கருத்து கூறக்கூடாது என  காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாக்கூர்  பதிலடி கொடுத்தார். இது அரசியல் விமர்சகர்களின் புருவங்களை உயர்த்த செய்துள்ளது.

இதுபோன்ற நிகழ்வுகளை திமுக தலைமை அமைதியாக கவனித்து வருகிறது. இதுவரை எந்தவொரு பதிலும் தெரிவிக்கவில்லை. காங்கிரஸ் தலைமை மற்றும் ராகுல்காந்தியின் ஆதரவு திமுகவுக்கு இருப்பதால், திமுக தலைமை அமைதி காத்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில்,  ராகுல் காந்தி தமிழக காங்கிரஸ் எம்பி, எம்எல்ஏ-க்களை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.  பொங்கலுக்கு முன்பாக இந்த சந்திப்பு நடைபெற வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றனர். இதை உறுதி செய்யும் வகையில்,  காங்கிரஸ் எம்எல்ஏ-வான எம்.ஆர்.ஆர்.ராதாகிருஷ்ணன், ராகுலை சந்திக்க அழைப்பு வந்ததும் டெல்லி செல்ல தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

‘விஜயை சந்தித்ததில் எந்த தவறும் இல்லை..! காங்கிரஸ் பிரவீன் சக்ரவர்த்தி விளக்கம்

காங்கிரஸ் உள் கட்சி பிரச்னையில் கூட்டணி கட்சிகள் தலையிட வேண்டாம்’! மாணிக்கம் தாகூர்

[youtube-feed feed=1]