சென்னை: பிறந்துள்ள ஆங்கில புத்தாண்டு வணிகர்களுக்கு அதிர்ச்சியை அளத்துளளது. வணிக சிலிண்டர்விலை ஒன்றுக்கு ரூ.110 விலை உயர்த்தப்பட்டுஉள்ளது.

ஆண்டின் தொடக்க நாளான இன்று (ஜனவரி 01, 2026) வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் உயர்த்தப்பட்டு உள்ளது. சிலிண்டர்விலை ஒன்றுக்கு ரூ.110 விலை உயர்த்தப்பட்டுஉள்ளது. இது பொதுமக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதே நேரத்தில், சென்னையில், வீட்டு பயன்பாட்டுக்கான 14.2 கிலோ கேஸ் சிலிண்டர் விலை கடந்த ஏப்ரல் மாதம் முதல் எவ்வித மாற்றமும் இன்றி, ரூ.868.50-க்கு என்ற நிலையில் தொடர்கிறது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகின்றன. இதில் சமையல் கேஸ் சிலிண்டர்களின் விலையை மாதத்தின் முதல் தேதியில் மாற்றி அமைத்து வருகிறது. அதன்படி, வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ கேஸ் சிலிண்டர் விலை கடந்த மார்ச் மாதத்தில் 5.50 ரூபாய் அதிகரித்தது. அதன் பிறகு ஏப்ரல், மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் என தொடர்ந்து 6 மாதங்களாக குறைந்தது. இடையே அக்டோபர் மாதத்தில் மட்டும் சிறிதளவு உயர்ந்த வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை மீண்டும் கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் மீண்டும் குறைந்தது.
இந்த நிலையில் மாதத்தின் தொடக்க நாளான இன்று (ஜனவரி 01, 2026) வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அந்த வகையில் சென்னையில் இன்று 19 கிலோ வணிக சிலிண்டரின் விலை 110 ரூபாய் உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் ரூ.1739.50-க்கு விற்பனை ஆகி வந்த வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர், தற்போது ரூ.1849.50-க்கு விற்பனையாகிறது.
மெட்ரோ நகரங்களான டெல்லியில் ரூ. 1,691.50, மும்பையில் ரூ. 1,642.50, கொல்கத்தாவில் ரூ. 1,691 என்ற விலையில் இன்று முதல் விற்பனை செய்யப்படுகின்றன.
[youtube-feed feed=1]