சென்னை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அறங்காவலர் குழுவை நியமித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.

சென்னை மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர்களாக அமைச்சர் தியாகராஜனின் தாயார் ருக்மணி உட்பட 5 பேரை நியமனம் செய்து அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
அறங்காவலர் குழு உறுப்பினர்களாக ருக்மணி பழனிவேல்ராஜன், மீனா அன்புநிதி, பி.கே.எம். செல்லையா, டாக்டர் சீனிவாசன், காந்தி நகர் சுப்புலட்சுமி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் ருக்மணி பழனிவேல் ராஜன், மறைந்த சபாநாயகர் பழனிவேல் ராஜனின் மனைவியும், அமைச்சர் பிடிஆரின் தாயாரும் ஆவார்.
மீனா அன்புநிதி என்றபர், அரசு வழக்கறிஞர் அன்புநிதியின் மனைவி ஆவார்.
பிகே.எம். செல்லையா என்பவர் அரசு ஒப்பந்ததாரர். திமுகவுக்கு வேண்டியவர்.
காந்திநகர் சுப்புலட்சுமி என்பவர் முன்னாள் திமுக கவுன்சிலர்.
மற்றொருவர் டாக்டர் சீனிவாசன்.
இவர்கள் விரைவில் பதவி ஏற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
[youtube-feed feed=1]