சென்னை: திமுக தேர்தல் அறிக்கைக்கு பிரத்யேக செல்போன் செயலி மூலம் கருத்து கேட்க திமுக திட்டமிட்டுள்ளது. இந்த செயலியை  இன்று அறிமுகம் செய்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின். இதன்மூலம் மக்கள் தங்களின் கருத்துக்களை தெரிவிக்கலாம்.

2026 சட்டமன்ற தேர்தலையொட்டி, திமுக வெளியிட இருக்கும் தேர்தல் அறிக்கையில் மக்கள் கோரிக்கைகள், கருத்துக்கள் இடம்பெறும் வகையில், புதிய App (செயலி) வெளியிடுகிறது. இந்த செயலியைஇன்று திமுகதலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்துகிறார்.

2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கு மக்களிடம் கருத்து கேட்க, பிரத்யேக மொபைல் செயலியை முதல்வர் மு.க. ஸ்டாலின்   இன்று (டிச. 31) அறிமுகம் செய்கிறார்.

தமிழ்ழுநாடு சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படவுள்ளதையொட்டி திமுகவின் தேர்தல் அறிக்கையைத் தயாரிக்க திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் 12 பேர் கொண்ட குழு ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் திமுக செய்தித் தொடா்புச் செயலா் டி.கே.எஸ்.இளங்கோவன், அமைச்சா்கள் கோவி.செழியன், பழனிவேல் தியாகராஜன், டி.ஆா்.பி.ராஜா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

இதையடுத்து, அண்ணா அறிவாலயத்தில், கடந்த டிச. 22 ஆம் தேதி இந்த குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, திமுகவின் தேர்தல் அறிக்கை, மக்களின் கோரிக்கைகள் அடங்கிய தேர்தல் அறிக்கையாக இருக்கும் என கூறினார்.

இந்தக் குழு, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து அனைத்து தரப்பினரையும் சந்தித்து கருத்துகளைக் கேட்டு திமுக தோ்தல் அறிக்கையை தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கு மக்களின் கருத்துகளைக் கேட்பதற்கு திமுக ஒரு மொபைல் செயலியை அறிமுகம் செய்யவுள்ளது.

முதல்வர் மு.க. ஸ்டாலின்  இன்று (டிச. 31) இந்த பிரத்யேக செயலியை அறிமுகம் செய்கிறார். மக்கள் தங்களுடைய கோரிக்கைகளை, கருத்துகளை இதன்மூலமாக தெரிவிக்க லாம் என்று கூறப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]