சென்னை: சென்ட்ரல் டூ விமான நிலையம் மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சிஎம்ஆர்எல் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னை கோயம்பேடு வழியாக சென்ட்ரல் மற்றும் விமான நிலையம் இடையே நேரடி மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டது. தொழில்நுட்பக் கோளாறால் கோயம்பேடு வழியாக மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்துக்கு பச்சை வழித்தடத்தில் பயணிப்பவர்கள், ஆலந்தூரில் நீல வழித்தடத்துக்கு மாற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரலில் இருந்து விமான நிலையம் வரை பச்சை வழித்தடத்தில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, சென்ட்ரல் மற்றும் கோயம்பேடு வழியாக விமான நிலையத்திற்குச் செல்லும் நேரடி ரயில் சேவை மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
பசுமை வழித்தடம் வழியாக (அண்ணா நகர், கோயம்பேடு வழியாக) விமான நிலையத்திற்குப் பயணம் செய்யும் பயணிகள், அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ நிலையத்தில் ரயிலை மாற்றி, நீல வழித்தட விமான நிலைய சேவைகளைப் பயன்படுத்தி தங்கள் பயணத்தைத் தொடருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அதேபோல், பசுமை வழித்தடத்தில் இருந்து நீல வழித்தடத்திற்குப் பயணம் செய்யும் பயணிகளும் அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ நிலையத்தில் ரயிலை மாற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
வழித்தடங்களுக்கு இடையேயான சேவை தவிர, பசுமை வழித்தடம் (புரட்சித் தலைவர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் – செயின்ட் தாமஸ் மவுண்ட்) மற்றும் நீல வழித்தடம் (விம்கோ நகர் – விமான நிலையம்) ஆகிய இரு வழித்தடங்களிலும் ரயில்கள் வார நாட்களுக்கான அட்டவணைப்படி சாதாரணமாக இயக்கப்படுகின்றன.
எங்கள் தொழில்நுட்பக் குழுக்கள் இந்தப் பிரச்சனையைத் தீர்க்க தீவிரமாகப் பணியாற்றி வருகின்றன, மேலும் இது குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் பகிரப்படும்.
இதனால் ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம், உங்கள் பொறுமைக்கு நன்றி.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.
[youtube-feed feed=1]