சென்னை: தமிழ்நாட்டில் ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க பச்சரிசி, சர்க்கரை ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது.

கடந்த ஆண்டு, அதாவது 2025 ஜனவரியில் பொங்கல் தொகுப்பில் அரிசி, சர்க்கரை, முழு கரும்பு ஆகியவை மட்டுமே வழங்கப்பட்டன; ரொக்கப் பணம் இல்லை, ஆனால் இந்த ஆண்டு வர இருக்கும் சட்டமன்ற தேர்தலை ஒட்டி ₹5,000 ரொக்கம் வழங்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 2.22 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க தலா 22,291 மெட்ரிக் டன் பச்சரிசி மற்றும் சர்க்கரை ஒதுக்கீடு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், பொதுமக்களுக்கு வழங்க 1.77 கோடி வேட்டி, 1.77 கோடி சேலைகள் நெசவாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும், பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு மற்றும் ரொக்கம் வழங்குவது தொடர்பாகவும் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் தெரிவிகின்றன
[youtube-feed feed=1]