சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ரூ.34.30 கோடி மதிப்பிலான 20 அதிநவீன விரைவு குளிர்சாதனப் சொகுசுப் பேருந்துகளின் சேவையை தொடங்கி வைத்தார்.

சென்னை தீவுத் திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சொகுசுப் பேருந்து சேவையை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு Multi Axle கொண்ட 20 அதி நவீன VOLVO குளிர்சாதன சொகுசுப் பேருந்துகளின் இயக்கத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
இந்த அதிநவீன குளிர்சாதன சொகுசுப் பேருந்துகள் சென்னை, பெங்களூரு, கோவை, திருச்சி, மதுரை, சேலம், திருநெல்வேலி, தஞ்சாவூர், நாகர்கோவில், திருச்செந்தூர், திருப்பூர் உள்ளிட்ட முக்கிய வழித்தடங்களில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக 20 நகரங்களில் 20 பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில் சென்னை – மதுரை 2 பேருந்துகளும், சென்னை – நெல்லை 2 பேருந்துகளும், சென்னை – திருச்செந்தூர் 2 பேருந்துகளும், சென்னை – தஞ்சை 2 பேருந்துகளும், சென்னை – சேலம் 2 பேருந்துகளும், சென்னை – திருப்பூர் 2 பேருந்துகளும், சென்னை – பெங்களூரு 2 பேருந்துகளும், சென்னை – திருச்சி 2 பேருந்துகளும், சென்னை – கோவை 2 பேருந்துகளும், கோவை – பெங்களூரு 2 பேருந்துகளும், சென்னை – நாகர்கோவில் 2 பேருந்துகளும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்து பயணிப்பதற்கான கட்டண விவரங்கள் உள்ளிட்டவை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து இப்பேருந்துகளில் பயணிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]