சென்னை: மத்திய அரசின் சிபிஎஸ்இ பாடத்தில் படித்து வரும் மாணவ மாணவிகளுக்கான 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தேதிகளை சிபிஎஸ்இ வாரியம் அறிவித்து உள்ளது.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 2025-26 கல்வி ஆண்டிற்கான பொதுத்தேர்வு தேதிகள் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அட்டவணை யின்படி, 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் பிப்ரவரி 17, 2026 அன்று தொடங்க உள்ளன.

புதிய தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020-க்கு இணங்க, 2026 ஆம் ஆண்டு முதல், 10 ஆம் வகுப்பு மாணவர்கள் ஆண்டுக்கு இரண்டு முறை பொதுத் தேர்வுகளை எழுதுவார்கள் என்று CBSE அறிவித்துள்ளது. பள்ளிகளும், மாணவர்களும் தேர்வுக்கு தயாராகும் விதமாக, செப்டம்பர் 24, 2025 அன்று ஒரு தற்காலிக தேதிப் பட்டியலை சிபிஎஸ்இ வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. பள்ளிகள் தங்கள் பாட சேர்க்கைத் தரவைச் சமர்ப்பித்த பிறகு, தேர்வுகளுக்கு 110 நாட்களுக்கு முன்பு இறுதி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
10ம் வகுப்புத் தேர்வுகள் பிப்ரவரி 17 தொடங்கி மார்ச் 10ம் தேதி வரை நடைபெற உள்ள சூழலில், 12ம் வகுப்புத் தேர்வுகள் ஏப்ரல் 9ம் தேதி வரை தொடர உள்ளது. தேர்வுகள் காலை மற்றும் பிற்பகல் என இரண்டு அமர்வுகளாக நடத்தப்பட உள்ளன.
காலை அமர்வில் 10:30 மணிக்கும், பிற்பகல் அமர்வில் 1:30 மணிக்கும் தேர்வு தொடங்கப்பட உள்ளது.
10ம் வகுப்பிற்கான சிபிஎஸ்இ பொதுத்தேர்வு அட்டவணை:
செவ்வாய், 17 பிப்ரவரி காலை 10:30 – பிற்பகல் 01:30 041 / 241 கணிதம் (தரநிலை / அடிப்படை)
புதன், 18 பிப்ரவரி காலை 10:30 – பிற்பகல் 01:30 064 – மனையியல்
வெள்ளிக்கிழமை, 20 பிப்ரவரி காலை 10:30 – மதியம் 12:30 407, 412, 415, 416, 418, 419 அழகு & ஆரோக்கியம்; மார்கெட்டிங் & சேல்ஸ்; மல்டிமீடியா; மல்டி-ஸ்கில் ஃபவுண்டேஷன்; உடல் செயல்பாடு பயிற்சியாளர்; டேட்டா சயின்ஸ்
சனி, 21 பிப்ரவரி காலை 10:30 – பிற்பகல் 01:30 101 / 184 ஆங்கிலம் (தொடர்பு / மொழி & இலக்கியம்)
திங்கள், 23 பிப்ரவரி காலை 10:30 – பிற்பகல் 01:30 003–011, 089 உருது, பஞ்சாபி, பெங்காலி, தமிழ், மராத்தி, குஜராத்தி, மணிப்பூரி, தெலுங்கு
புதன், 25 பிப்ரவரி காலை 10:30 – பிற்பகல் 01:30 086 – அறிவியல்
வியாழன், 26 பிப்ரவரி காலை 10:30 – மதியம் 12:30 401–422 ரிடெய்ல்; பாதுகாப்பு; தானியங்கி; வங்கி; சுகாதாரப் பராமரிப்பு.. etc
வெள்ளிக்கிழமை, 27 பிப்ரவரி காலை 10:30 – மதியம் 12:30 165, 402, 417 கணினி பயன்பாடுகள்; ஐடி; செயற்கை நுண்ணறிவு
திங்கள், 2 மார்ச் காலை 10:30 – பிற்பகல் 01:30 002/085 இந்தி (பாடப்பிரிவு A / B)
சனி, 7 மார்ச் காலை 10:30 – பிற்பகல் 01:30 087 – சமூக அறிவியல்
செவ்வாய், 10 மார்ச் காலை 10:30 – பிற்பகல் 01:30 018 தமிழ் ஃப்ரெஞ்ச்
12ம் வகுப்பிற்கான சிபிஎஸ்இ பொதுத்தேர்வு அட்டவணை
செவ்வாய், 17 பிப்ரவரி காலை 10:30 – பிற்பகல் 01:30 045, 066 உயிரி தொழில்நுட்பம்; தொழில்முனைவு
புதன், 18 பிப்ரவரி காலை 10:30 – பிற்பகல் 01:30 048 உடற்கல்வி
வெள்ளிக்கிழமை, 20 பிப்ரவரி காலை 10:30 – பிற்பகல் 01:30 042 இயற்பியல்
சனி, 28 பிப்ரவரி காலை 10:30 – பிற்பகல் 01:30 043 வேதியியல்
வியாழன், 12 மார்ச் காலை 10:30 – பிற்பகல் 01:30 001, 301 ஆங்கிலம் (தேர்வு / கோர்)
திங்கள், 16 மார்ச் காலை 10:30 – பிற்பகல் 01:30 002, 302 இந்தி (தேர்வு / கோர்)
புதன், 18 மார்ச் காலை 10:30 – பிற்பகல் 01:30 030 பொருளாதாரம்
திங்கள், 23 மார்ச் காலை 10:30 – பிற்பகல் 01:30 028 அரசியல் அறிவியல்
புதன், 25 மார்ச் காலை 10:30 – பிற்பகல் 01:30 065, 083 தகவலியல் பயிற்சிகள்; கணினி அறிவியல்
வியாழன், 27 மார்ச் காலை 10:30 – பிற்பகல் 01:30 044 உயிரியல்
சனி, 28 மார்ச் காலை 10:30 – பிற்பகல் 01:30 054 வணிக ஆய்வுகள்
திங்கள், 30 மார்ச் காலை 10:30 – பிற்பகல் 01:30 027 வரலாறு
சனி, 4 ஏப்ரல் காலை 10:30 – பிற்பகல் 01:30 039 சமூகவியல்
வியாழன், 9 ஏப்ரல் காலை 10:30 – மதியம் 12:30 821, 829, 844 மல்டிமீடியா; ஜவுளி வடிவமைப்பு; தரவு அறிவியல்
தேர்வு தொடங்கும் 10.30/01.30 மணிக்கு குறைந்தது 30 நிமிடங்களுக்கு முன்பாகவே, நுழைவுச் சீட்டு மற்றும் பள்ளி அடையாள அட்டையுடன் மாணவர்கள் தேர்வு அறையை அடைய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
FULL SCHEDULE: CBSE BOAD EXAMJ2026
