சென்னை; மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று சென்னை உள்பட பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

தமிழ்நாட்டில் அக்டோபர் 2வது வாரம் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், காற்றின் வேக மாறுபாடு மற்றும் வங்கக்கடலில் உருவாகி வரும் காற்றழுத்த மண்டலங்கள் போன்றவற்றால் அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், ஒட்டிய மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. மேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தெற்கு ஒரிசா – வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் வருகின்ற இன்று ( 27-ஆம் தேதி)  கரையை கடக்கக்கூடும்  என கூறப்படுகிறது.

இதன் காரணமாக,   சென்னை உள்பட தமிழ்நாட்டின் 17 மாவட்டங்கள் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும்,  மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த தரைக்காற்று ம வீசக்கூடும் என்று குறிப்பிட்டுள்ளது.

இன்று தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், அதன்படி,  சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

கன்னியாகுமரி, கோவை, நீலகிரி, தென்காசி, நெல்லை, திண்டுக்கல், திருப்பூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.