சென்னை: சென்னையில், நடிகர் ஜெய்சங்கர் வசித்து வந்த பகுதி சாலையை, ஜெய்சங்கர் சாலை என பெயர் மாற்றம் செய்வதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஜெய்சங்கர் சாலை என்ற பெயர் பலகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

மறைந்த தலைவர்கள், நடிகர்கள் போன்றோரை கவுரப்படுத்தும் வகையில், அவர்கள் வசித்து வந்த பகுதிகளில் உள்ள சாலைகளுக்கு அவர்களின் பெயர்களை சூட்டி தமிழ்நாடு அரசு கவுரவித்து வருகிறது.
அதன்தொடர்ச்சியாக இன்று சென்னையில், நடிகர் ஜெய்சங்கர் வசித்து வந்த நுங்கம்பாக்கம் கல்லூரி பாதை, ஜெய்சங்கர் சாலை என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த பெயர் பலகைகைய திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், மறைந்த நடிகர் ஜெயச்சந்திரனின் குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.
இதையடுத்து, மந்தைவெளிப்பாக்கம் 5ஆவது குறுக்கு தெரு பெயர், நடிகர் எஸ்வி சேகரின் தந்தையும், மறைந்த நாடக நடிகர் எஸ்.வி.வெங்கடராமன் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்தபெயர் பலகையையும் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சென்னை தலைமைச்செயலகத்தில் நாடக நடிகர், தமிழ்நாட்டின் முதல் தொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளர், அரிமா சங்கத்தில் பல முக்கிய பொறுப்புகளை வகித்த எஸ்.வி. வெங்கடராமன் வசித்து வந்த மந்தைவெளிப்பாக்கம் 5-வது குறுக்கு தெருவிற்கு எஸ்.வி. வெங்கடராமன் தெரு என்ற புதிய பெயர் சூட்டப்பட்ட சாலைகளின் பெயர் பலகைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இந்நிகழ்வில் எஸ்.வி.வெங்கடராமன் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
எஸ்.வி. வெங்கட்ராமன் (25 ஏப்ரல் 1911 – 7 ஏப்ரல் 1998) தமிழ்த் திரையுலகில் குறிப்பிடத்தக்க இசையமைப்பாளராக விளங்கியவர். நடிகராகவும், பாடகராகவும் தமிழ்த் திரைப்படங்களில் தனது பங்களிப்பினைத் தந்தவர். இருநூறுக்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழித் திரைப்படங்களுக்கு இவர் இசையமைத்தவர் என்பத குறிப்பிடத்தக்கது.