சென்னை: தமிழ்நாடு பாடநூல்-கல்வியியல் பணிகள் கழகம் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள 26 புதிய நூல்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.

சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அதன்படி, தமிழ்நாடு பாடநூல்-கல்வியியல் பணிகள் கழகம் சார்பில் 26 புதிய நூல்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
கள்ளக்குறிச்சியில் ரூ. 4.01 கோடியில் மாவட்ட மைய நூலகங்களுக்கு அடிக்கல் நாட்டியதுடன், பள்ளிக்கல்வித் துறையின் பாடநூல், கல்வியியல் பணிகள் கழகத்தின் 26 நூல்களையும் வெளியிட்டார் முதல்வர்.
இதைத்தொடர்ந்து, பொது நூலக இயக்ககம் சார்பில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக பல்வேறு இடங்களில், ரூ.39.33 கோடியில் 146 நூலக கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சென்னை கிண்டி தொழிற்பேட்டை வளாகத்தில் 41,519 சதுர அடி பரப்பில் ரூ. 23.10 கோடியிலான புவியியல், சுரங்கத் துறை தலைமை அலுவலக கட்டடங்களை காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.
மருத்துவ அறிவியல் பல்கலை.யில் 6 பேர் உட்பட மொத்தம் 62 பேர், மீன்வளத்துறை சார்பில் 38 பேர், பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் சார்பில் 18 பேருக்கு பணி ஆணைகளும் வழங்கப்பட்டன.
இதையடுத்து, கள்ளக்குறிச்சியில் ரூ.1.01 கோடியில் மாவட்ட மைய நூலகங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.