சென்னை: நவம்​பர் மாத இறு​திக்​குள் சென்​னை​யில் ஒரு லட்​சம் தெரு​ நாய்​களுக்கு ரேபிஸ் நோய் தடுப்​பூசி செலுத்த நடவடிக்கை எடுத்​து​வரு​வ​தாக மாநக​ராட்சி அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர்.

சென்னை மாநகரில் தெரு​ நாய்​கள் மற்​றும் வளர்ப்பு நாய்​களால் குழந்​தைகளும், பெரிய​வர்​களும், வாகன ஓட்​டிகளும் பாதிக்​கப்​படு​வது தொடர்​கதை​யாக உள்​ளது. ரேபிஸ் நோயால் ஏற்​படும் உயிரிழப்பு​களும் அதி​கரிக்​கின்​றன. இதைத்தொடர்ந்து,   முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கை​யாக மாநக​ராட்சி நிர்​வாகம் தெரு நாய்​களுக்கு, வீதி வீதியாக சென்று  ரேபிஸ் நோய் தடுப்​பூசி போடும் பணி​களைத் தீவிரப்​படுத்​தி​யுள்​ளது.

தமிழகத்​தில் உள்ள 2,236 ஆரம்ப சுகா​தார நிலை​யங்​களி​லும் நாய்க்​கடிக்​கான மருந்து இருப்பு வைக்​கப்​பட்​டுள்​ள​தாக அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் தெரி​வித்தார்.

கடந்த ஆண்டு (2024)  நடந்த கணக்​கெடுப்​பின்​படி சென்​னை​யில் ஒரு லட்​சத்து 80 ஆயிரம் தெரு​ நாய்​கள் இருப்​பது கண்​டறியப்​பட்​டது. இவற்​றுக்கு தடுப்​பூசி செலுத்​துதல், கருத்​தடை அறுவை சிகிச்சை செய்​தல், மைக்ரோ சிப் பொருத்​துதல் உள்​ளிட்ட பணி​களை மாநக​ராட்சி மேற்​கொண்டு வரு​கிறது. இது​வரை 12 ஆயிரத்து 580 தெரு​நாய்​களுக்கு மைக்ரோ சிப் பொருத்​தப்​பட்​டுள்​ளது.

இதையடுத்து,  அனைத்து தெரு நாய்​களுக்​கும் ரேபிஸ் தடுப்​பூசி செலுத்​தும் சிறப்பு முகாம்​களை கடந்த ஆக.9-ம் தேதி மாநக​ராட்சி தொடங்​கியது. இந்த சிறப்பு முகாம் மூலம் மாநக​ராட்சி கால்​நடைத் துறை ஊழியர்​கள், மண்​டலம் வாரி​யாக சென்று தெரு​நாய்​களுக்கு ரேபிஸ் தடுப்​பூசி செலுத்தி வரு​கின்​றனர். இது​வரை​ 53 ஆயிரம் தெரு நாய்​களுக்கு ரேபிஸ் தடுப்​பூசி செலுத்​தப்​பட்​டுள்​ளது. வரும் நவம்​பர் மாத இறு​திக்​குள் ஒரு லட்​சம் தெரு நாய்​களுக்கு ரேபிஸ் தடுப்​பூசி செலுத்த இலக்கு நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ள​தாக மாநக​ராட்சி அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்,  நாய் இனப் பெருக்​கத்தை குறைப்​பது குறித்து பல்​வேறு நடவடிக்​கைகளை எடுத்து வரு​கிறோம் என்றவர்,    நாய்க்​கடி, பாம்​புக்​கடிக்​கான மருந்து என்​பது வட்​டார, மாவட்ட அளவி​லான மருத்​து​வ​மனை​களில் மட்​டுமே இருந்து வந்த நிலை​யில் இன்​றைக்கு தமிழகத்​தில் 2,236 ஆரம்ப சுகா​தார நிலை​யங்​களி​லும் நாய்க்​கடிக்​கும், பாம்​புக்​கடிக்​கும் மருந்து இருப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது என கூறினார்.