மதுரை: உயர்நீதிமன்றம் மதுரை கிளைக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததைத் தொடர்ந்து அங்கு வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். இதையடுத்து, நீதிமன்ற வளாகத்தில் இருந்த அனைவரும் வெளியேற்றம் செய்யப்பட்டதால், நீதிமன்ற பணிகள் பாதிப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தால், அங்கு பரபரப்பு நிலவியது.
இதற்கிடையில், சென்னையிலும், உயர்நிதிமன்றம், டிஜிபி அலுவலகம் உள்ளிட்ட இடங்களுக்கு மின்னஞ்சல் மூலம் மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது தெரிய வந்தது. இந்த மிரட்டலை அடுத்து வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சோதனை நடத்தினர். அது புரளி என்பது ஊர்ஜிதம் செய்யப்பட்டது.

நாடு முழுவதும் சமீப காலமாக முக்கிய இடங்களுக்கு, கல்வி நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவது வாடிக்கையாக உள்ளது. இதுபோன்று மிரட்டல் விடுக்கும் நபர்களை சைபர் கிரைம் போலீசார் கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை சென்னை உயர்நிதிமன்றம் மதுரை கிளையில் பணிகள் வழக்கம் போல் தொடங்கி நடைபெற்று கொண்டிருந்தன. அப்போது உயர்நீதிமன்ற கிளையின் மின்னஞ்சலில் ஒரு மெயில் வந்திருந்தது. அதில் நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்ததது.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த நீதிமன்ற அலுவலர்கள் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் நீதிபதிகள் கவனத்துக்கும் கொண்டு சென்றனர். இதையடுத்து நீதிபதிகள், நீதிமன்ற ஊழியர்கள், பொதுமக்கள், வக்கீல்கள் அனைவரும் நீதிமன்ற வளாகத்தில் இருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

இதைத் விரைந்து வந்த காவல்துறையினர், வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மோப்ப நாய் உதவியுடன் நீதிமனற் வளாகம், நீதிபதி குடியிருப்பு, நீதிமன்ற அரங்கம் உள்ளிட்ட பகுதிகளில் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் தீவிர சோதனை நடத்தினர், சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேல் நடந்த சோதனை முடிவில் வெடிகுண்டு ஏதும் இல்லை என்பது தெரிய வந்தது. இது வெடிகுண்டு புரளி என தெரியவந்தது. இதனால் பொதுமக்கள் உள்பட அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
இதையடுத்து வழக்கு விசாரணை சுமார் 2மணி நேரம் தாமதமாக தொடங்கியது.
இதற்கிடையில் வெடிகுண்டு மிரட்டல் குறித்து மின்னஞ்சல் அனுப்பிய நபர் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.