சென்னை : சென்னை கலைவாணர் அரங்கம் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேர்வு செய்யப்பட்டுள்ள 1,231 கிராம சுகாதார செவிலியர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் அரசு செவிலியர் பயிற்சிப் பள்ளியில் பயின்ற, 1,156 கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும், 75 துணை செவிலியர் என மொத்தம் 1231 செவிலியர்களுககு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்ற நிகர்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் அரசு செவிலியர் பயிற்சிப் பள்ளியில் பயின்ற 1,156 கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் 75 துணை செவிலியர்கள் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் தெரிவு செய்யப்பட்டு அதற்கான பணி நியமனம் இன்று வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு செவிலியர்களுக்கு ஆணைகளை வழங்கினார். பணி நியமன ஆணை பெற்ற செவிலியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் சேகர்பாபு, மா. சுப்பிரமணியன், மேயர் பிரியா மற்றும் அரசு அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.