ஓசூர்: ஒசூர் அருகே தெருநாய் கடித்து பலத்த காயமடைந்த 3 வயது வடமாநில சிறுவன் சிகிச்சை பலன்றி  உயிரிழந்துள்ளார். இது பெரும் சோகத்தையும், மக்களிடையே ஆத்திரத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

நெருநாய் தொல்லைகள் மற்றும், அதனால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பொதுமக்களே தெருநாய்களை வேட்டையாடும் சூழல் உருவாகி வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த மாசிநாயக்கனப்பள்ளியில் உள்ள பசுமைகுடிலில் உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த வடமாநில குடும்பத்தினர் தங்கி வேலைபார்த்து வருகின்றனர். சம்பவத்தன்று அவர்களின் 3வயது மகன் சத்தியா என்ற சிறுவன் பொது வெளியில் விளையாடி கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த தெருநாய் அந்த பிங்சுவை கடித்து குதறியுற்றது. குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பெற்றோர்கள் நாயை அடித்து விரட்டிவிட்டு குழந்தை மீட்டனர். குழந்தையின் முகம் உள்பட உடல் முழுவதும் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அந்த சிறுவன் ஒசூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

இந்த நிலையில், இன்று அந்த சிறுவன்  திடீரென மயங்கி விழுந்ததால் அதிர்ச்சி அடைந்த அந்த குழந்தையின் பெற்றோர், மருத்துவமனை தூக்கிச் சென்றனர். ஆனால், அவரை சோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.   இது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. உயிரிழந்த சிறுவன், நாய் கடியால் ஏற்பட்ட   ரேபிஸ் நோய் தாக்கத்தால் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

தெருநாய் தொல்லையால், இன்று வடமாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு  பஞ்சம் பிழைக்க  குடும்பத்தின் வம்சமே காலியாக உள்ளது. இது மக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இதேநிலை நிடித்தால், மக்களே தெருநாய்களை வேட்டையாடும் காலம் வெகுதூரத்தில் இல்லை என்பதை வளர்ப்பு பிராணிகளின் ஆர்வலர்களும், அரசும் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

வீட்டுக்குள் தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த இரண்டு வயது குழந்தையை தெருநாய் கடித்து குதறிய சம்பவம்! திருவாரூர் அருகே பரபரப்பு…

தெருநாய் விவகாரம்: பொது இடங்களில் நாய்களுக்கு உணவளிக்க தடை உள்பட முக்கிய உத்தரவுகள்…