டெல்லி: ஜிஎஸ்டி 2.0 எனப்படும் புதிய ஜிஎஸ்டி வரி குறைப்பு நாடு முழுவதும் இன்று முதல் அமலுக்கு வந்தது. இதன் காரணமாக வீட்டு உபயோக பொருட்கள், இருசக்கர மற்றும் 4 சக்கர வாகனங்கள் உள்பட பல்வேறு பொருட்களின்  விலை வெகுவாக குறைந்துள்ளது.

நாடு முழுவதும்  5, 12, 18, 28% என இருந்த ஜிஎஸ்டி விகிதம் 2 அடுக்குகளாக குறைக்கப்பட்டு அண்மையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, நாடு முழுவதும் இன்று (செப்டம்பர் 22ந்தேதி, 2025)   முதல் 5%, 18% என்ற அடியில் மட்டுமே ஜிஎஸ்டி வரி விகிதம் அமலுக்கு வந்துள்ளது.

முன்னதாக,   இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) 2017 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி அன்று அமல்படுத்தப்பட்டது. இது இந்திய அரசியலமைப்பின் 101வது திருத்தத்தை நிறைவேற்றிய பிறகு நடைமுறைக்கு வந்தது.   இ  மறைத்த மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியால் 2017 ஜூலை 1 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது.  இது இந்திய அரசியலமைப்பின் 101வது திருத்தத்தை நிறைவேற்றிய பிறகு நடைமுறைக்கு வந்தது.  முன்னதாக,  1999 இல் அப்போதைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் மற்றும் பொருளாதார ஆலோசனைக் குழுவினரிடையே நடந்த சந்திப்பின் போது ஜிஎஸ்டி பற்றிய கருத்துருவாக்கம் செய்யப்பட்டது. 

இதைத்தொடர்ந்து 4 விகிதங்களில் இருந்து வந்த வரி விதிப்பு, தற்போது இரண்டு விகிதங்களாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் ஏராளமான பொருட்கள் குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதேவேளையில், புகையிலை மற்றும் ஆடம்பர பொருள்களுக்கான ஜிஎஸ்டி 40%ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதை பிரதமர் மோடி, புதிய வரலாறு என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நேற்று (செப்டம்பர் 21) மாலை  மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி,  ஒரே தேசம், ஒரே வரி என்ற கனவு ஜிஎஸ்டி மூலம் பூர்த்தியானது. தற்போது காலம் மாறிவிட்டது. தேவையும் மாறிவிட்டது. அதனால் தான் தற்போது இரண்டாம் தலைமுறை வரி சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது  என்றார்.

மேலும்,  ஜிஎஸ்டி.,க்கு முன்பு 12 வகையான வரிகள் இருந்தன. இதனால் ஒரு நகரத்தில் இருந்து மற்றொரு நகரத்திற்கு பொருட்களை கொண்டு சென்று விற்பதிலும் மக்கள் சிரமப்பட்டனர் ஜிஎஸ்டி 2.0 – இன்று முதல் அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் அமலுக்கு வருகின்றன; இதன் மூலம் மக்களின் சேமிப்பு அதிகரிக்கும். கோடிக்கணக்கான குடும்பங்கள் மகிழ்ச்சி அடையும் என்றார்.

ஜிஎஸ்டி 2.0 என்ற புதிய வரி திருத்தம் காரணமாக,  ஏராளமான பொருட்கள் விலை குறைந்துள்ளது. சாக்லேட்டுகள், ரெடிமேட் பாஸ்தா, நுாடுல்ஸ் ஆகியவை 5 சதவீதத்திற்கு வந்துள்ளதால், அவற்றின் விலையும் குறையும்.

பென்சில், ரப்பர், ‘மேப்’ மீதான வரி முற்றிலும் நீக்கப் பட்டுள்ளது.

சோப்பு, டூத் பேஸ்ட், ஷாம்பு போன்ற பொருட்கள் மீதான வரி குறைக்கப்பட்டு உள்ளதால் விலை குறையும்.

பானை, குக்கர், தட்டு, கரண்டி, அடுப்பு, கண்ணாடி, கத்தி, மேசை கரண்டி விலை குறையும்.

சைக்கிள் 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதத்திற்கு வந்து விட்டதால், சராசரியாக 1,000 முதல்  3,500 ரூபாய் வரை விலை குறையும்.

சிமென்ட் மீதான வரி குறைக்கப்பட்டு உள்ளதால், மூட்டைக்கு 40 ரூபாய் வரை குறையும் என எதிர்பார்க்கப்படுகறிது.

ரெடிமேட் பரோட்டா மற்றும் சப்பாத்திக்கு ஜி.எஸ்.டி.,யில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால் விலை குறையும்.

நெய், வெண்ணெய் மீதான வரி குறைக்கப்பட்டு உள்ளதால், அவற்றின் விலையும் குறையும். உதாரணத்துக்கு, 1 கிலோ நெய் 40 – 50 ரூபாய் வரை குறையும்.

உலர் பழங்கள், நொறுக்குத்தீனி மீதான வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளதால் விலை குறையும்.

வீட்டு உபயோக பொருக்டளான ‘ஏசி, பிரிஜ், வாஷிங் மிஷின்’ மற்றும் 32 அங்குலத்துக்கு மேல் உள்ள ‘டிவி’க்கள், பாத்திரம் கழுவும் இயந்திரம் ஆகியவை மீதான வரி, 28 சதவீதத்தில் இருந்து 18 ஆக குறைந்துள்ளது.

ஆடம்பர கார்களை தவிர, 1,200 ‘சிசி’க்கும் குறைவாக உள்ள கார்கள் மீதான வரி, 28 சதவீதத்தில் இருந்து 18 ஆக குறைக்கப்பட்டு உள்ளதால், விலை குறைந்துள்ளது.

350 உட்பட்ட ‘சிசி’க்கு இருசக்கர வாகனம் மீதான வரி, 28ல் இருந்து 18 ஆக குறைந்து விட்டது. அதனால், அதன் விலை 10,000 ரூபாய் 30,000 வரை குறையும்.

மருத்துவ உபகரணங்கள், தெர்மா மீட்டர்கள், நோய் கண்டறியும் கருவிகள், ரத்த சர்க்கரை ஆகியவற்றின் கண்டறியும் கருவிகள், சில மருந்துகள், மாத்திரைகள் ஆகியவற்றின் விலை குறையும்.

மூக்கு கண்ணாடி, லென்சுகள் மீதான வரி 12 சதவீதத்தில் இருந்து 5 ஆக குறைந்துள்ளது.

 

பொதுமக்களுக்கு தீபாவளி பரிசு : இன்சூரன்ஸ் டிவி ஏசி, பிரிட்ஜ் வாகனங்கள் உள்பட பல பொருட்களுக்கு வரி குறைப்பு