டெல்லி: பாமக தலைவர் அன்புமணி என இந்திய தேர்தல் ஆணையம் அங்கீரித்துள்ளதை வாபஸ் பெற வலியுறுத்தி டெல்லியில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணையத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பாமகவில் தந்தை மகனுக்கு இடையே எழுந்துள்ள மோதல், கட்சியை இரண்டாக பிளவுபடுத்தி உள்ளது. தற்போது கட்சியை யார் கைப்பற்றுவது என்ற  நோக்கில் இரு தரப்பும் தங்களது பலத்தை காட்டி வருகிறது. ஒருவரை ஒருவர் கட்சியில் இருந்து நீக்கியும், சேர்த்தும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் இரு தரப்பும் பொதுக்குழுவை கூட்டி யாருக்கு மெஜெரிட்டடி ஆதரவு என்பதை நிரூபித்து வருகின்றனர். அன்புமணி கூட்டிய பொதுக்குழு கூட்டத்தில் பெரும்பாலோர் கலந்துகொண்ட நிலையில், அன்புமணி மேலும் இரு ஆண்டுக்கு கட்சி தலைவராக இருக்கும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதுகுறித்து முறையாக தேர்தல் ஆணையத்தக்கும் அறிவிக்கப்பட்டது.

இதை ஏற்று  இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தில் இருந்து பாமக தலைவர் என்ற  முறையில், அன்புமணி கடிதம் அனுப்பப்பட்டது,   அந்த கடிதத்தில், அன்புமணி ராமதாஸை பாமக கட்சியின் தலைவராக அங்கீகரித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அனுப்பி இருப்பதாக அக்கட்சியின் வழக்கறிஞர் பாலு தெரிவித்து இருந்தார். அந்த கடிதத்தை செய்தியளார்களிடையே காண்பித்தார். இது ராமதாஸ் தரப்பினருக்கு   அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதை எதிர்த்து,   பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பு இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டுள்ளது. பாமக எம்.எல்.ஏ. அருள், பொதுச்செயலாளர் முரளி சங்கர், சட்ட ஆலோசகர் ஆகியோர் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையரை இன்று காலை சந்தித்தனர். அப்போது, தலைவர் பதவியில் இல்லாத ஒருவரின் குழுவுக்கு கட்சி அங்கீகாரம், சின்னம் ஒதுக்கியிருப்பது ஏற்புடையதல்ல. உரிய நடைமுறை இல்லாமல் அன்புமணிக்கு கடிதம் அளித்தது தவறு; அதை உடனடியாக திரும்பப் பெறவேண்டும். மேலும், உரிய விசாரணை அடிப்படைக்கு பிறகு அங்கீகாரம் வழங்கவேண்டும் என ராமதாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.