டெல்லி: அதிமுக பொதுச்செயலாளர் டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த நிலையில், அவரை சந்தித்தது. ஏன் தெரியுமா? எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி இன்று (செப்டம்பர் 17) தமது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மாண்புமிகு இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவர்களை தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் கழக நாடாளுமன்ற உறுப்பினர்களோடு நேற்று சந்தித்து, தேச விடுதலைக்காக பாடுபட்ட தெய்வத் திருமகனார் பசும்பொன் ஐயா உ. முத்துராமலிங்கத் தேவர் அவர்களுக்கு இந்தியத் திருநாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா வழங்கிட வேண்டும் என அதிமுக சார்பில் கடிதம் வழங்கி வலியுறுத்தினேன் என தெரிவித்துள்ளார்.
டெல்லியில் அமித்ஷாவை நேற்று இரவு 8.10 மணிக்கு எடப்பாடி பழனிசாமியும் அதிமுக மூத்த தலைவர்களும் சந்தித்தனர். இந்த சந்திப்பு சுமார் 40 நிமிடங்களுக்கும் மேல் நீடித்தது. இந்த சந்திப்புக்குப் பின்னர் டெல்லியில் செய்தியாளர்களை எடப்பாடி பழனிசாமி சந்திக்கவில்லை. அதேநேரத்தில், பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க கடிதம் கொடுத்தேன் என்று மட்டும் இன்று தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு படங்களையும் பகிர்ந்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.
இதையடுத்து தமது பயணத்தை முடித்துக் கொண்டு இன்று காலை டெல்லியில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் புறப்பட்டார் எடப்பாடி பழனிசாமி.

அதிமுக பாஜக இடையே கூட்டணி உறுதி செய்யப்பட்டாலும், இரு கட்சி தலைவர்களுக்கு இடையே சலசலப்பு நீடித்து வருகிறது. கடந்த வாரம், அதிமுகவின் மூத்த தலைவரும் அமைச்சருமான செங்கோட்டையன், அதிமுகவில் முக்கிய பொறுப்புகளிலிருந்து விலகிச் சென்றவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும். ஒன்றிணைந்தால் மட்டும் வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றிப் பெற முடியும் என்று கூறி 10 நாள் கெடு விதித்தார். ஆனால், அவரது கோரிக்கையை ஏற்பது குறித்து கருத்துதெரிவிக்காத எடப்பாடி, அவரை கட்சியின் அடிப்படை பொறுப்புகளில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து சுமார் 2000 க்கும் மேற்பட்ட செங்கோட்டையன் ஆதரவாளர்கள் கூண்டோடு ராஜினாமா செய்தனர்.
இதற்கிடையே பிரதமர் சந்திக்க நேரம் வழங்காததால் அதிருப்தியில் இருந்த ஓ.பன்னீர்செல்வம் அதிமுக பாஜக கூட்டணியிலிருந்து விலகினார். அது மட்டுமின்றி தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமியை ஏற்க முடியாது என்று கூறி தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து டிடிவி தினகரன் விலகினார். இதனால் அதிமுக ஒன்றிணைவது கேள்விக்குறியாகி உள்ளது.
இந்தப் பரபரப்பான சூழலில் தான் ஹரித்வார் செல்வதாகக் கூறிச் சென்ற செங்கோட்டையன் டெல்லியில் அமித்ஷா மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார். இதனைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை செங்கோட்டையன் சந்திப்பு நடந்தியத்தில் எடப்பாடி பழனிசாமி அதிருப்தியில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், செய்தியளார்கள் கேள்வி ஒன்றுக்கு பதில் கூறிய எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிருக்க பிறகு அதிமுகவைக்காப்பாற்றிக் கொடுத்த பாஜகவிற்கு என்றும் நன்றிக் கடனாக இருப்பேன் என்று எடப்பாடி கூறியிருந்தார். இதுவும் விமர்சனங்களை ஏற்படுத்தியது.
இந்த பரபரப்புக்கு மத்தியில், எடப்பாடி பழனிசாமி செப்டம்பர் 16ந்தேதி காலை சென்னையிலிருந்து விமான மூலம் டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றார். அவருடன் மூத்த தலைவர்களான, கே.பி முனுசாமி, எஸ். பி. வேலுமணி, சி.வி சண்முகம் உள்ளிட்டோர் சென்றதாகத் தகவல் வெளியானது.
டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை அதிமுக தலைவர்கள் மற்றும் எம்.பி.க்களுடன் சர்ந்தது, துணை குடியரசுத் தலைவராகப் பொறுப் பேற்றுள்ள சி.பி. ராதாகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க உள்ளார்.மேலும் ராதகிருஷ்ணன் கொடுக்கும் தேநீர் விருந்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார்.
இதனைத் தொடர்ந்து இரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். மேலும் பால பாஜக முக்கிய தலைவர்களைச் சந்தித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அரசியல் களம் பரபரப்பு அடைந்தது.
ஆனால், எடப்பாடி பழனிச்சாமியோ, அமித்ஷாவை சந்தித்தது, முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க கோரிக்கை வைக்கவே என்று தெரிவித்துள்ளார்.