டெல்லி: குடியரசு துணைத் தலை​வருக்கான தேர்தலில் வெற்றிபெற்றுள்ள தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரான தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி. இராதாகிருஷ்ணன், நாளை   (செப். 12) பதவி​யேற்க உள்​ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

குடியரசு துணைத் தலை​வ​ராக இருந்த ஜெகதீப் தன்​கர் பதவி வில​கியதை தொடர்ந்​து, அப்​ப​தவிக்கு  தேர்​தல் நடை​பெற்​றது. இதில் பாஜக தலை​மையி​லான ஆளும் தேசிய ஜனநாயக கூட்​டணி சார்​பில் போட்​டி​யிட்ட தமிழகத்தை சேர்ந்த சி.பி.​ரா​தாகிருஷ்ணன்  போட்டியிடார். அவரை எதிர்த்து, இண்டியா கூட்டணி சார்பில் ஓய்வுபெற்ற நீதிபதி சுதர்ஷன ரெட்டி நிறுத்தப்பட்டார். அவருக்கு, அவரது  சமூக மக்கள் உள்ள ஆந்திர, தெலுங்கானா மாநில எம்.பி.க்களே வாக்களிக்க மறுத்து விட்டனர்.

இந்த நிலையில், தேர்தலில்,  தேர்​தலில் மொத்​தம் பதி​வான 767 வாக்​கு​களில், சி.பி.​ரா​தாகிருஷ்ணன் 452 வாக்​கு​கள் பெற்​று அமோக வெற்றி பெற்றார். இதன்முலம் நாட்​டின் 15-வது குடியரசு துணைத் தலை​வ​ராக சி.பி.​ரா​தாகிருஷ்ணன்  தேர்வாகி உள்ளார்.

இவர்  நாளை (செப். 12) பதவி​யேற்க உள்​ளார். அவருக்கு குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு பதவிப் பிர​மாணம் செய்​து​வைக்க உள்​ளார். டெல்​லி​யில் நடை​பெறும் விழா​வில் பிரதமர் நரேந்​திர மோடி உள்​ளிட்ட தலை​வர்​கள் பங்​கேற்க உள்​ளனர்.

சி.பி.​ரா​தாகிருஷ்ணன் தற்​போது மகா​ராஷ்டிர ஆளுந​ராக உள்​ளார். குடியரசு துணைத் தலை​வ​ராக பதவி​யேற்​கும் முன் அவர் இப்​ப​த​வியை ராஜி​னாமா செய்​வார் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

குடியரசு துணைத் தலை​வரே மாநிலங்​களவை​யின் அலு​வல் வழி தலை​வர் ஆவார். எனவே, எதிர்வரும் குளிர்​கால கூட்​டத்​தொடரில் மாநிலங்​களவை தலை​வ​ராக சி.பி.​ரா​தாகிருஷ்ணன்​ கடமை​யாற்​று​வார்​.