சென்னை: ஜொ்மனி பல்கலைக்கழகம் வழங்கிய தமிழ் ஓலைச் சுவடியை  முதல்வா் ஸ்டாலின் சென்னை நூலகத்தில் ஒப்படைத்தாா்.

தமிழ்நாட்டிற்கு தொழில்முதலீடுகளை ஈர்க்க முதல்வர் ஸ்டாலின் கடந்த மாதம் இறுதியில் ஜெர்மனி, இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது,  ஜொ்மனி பல்கலைகழகம் அவர்களிடம்  இருந்த தமிழ் ஓலைச் சுவடிகளை முதல்வர் ஸ்டாலினிடம் ஒப்படைத்தது. அதை  முதல்வர்  சென்னை நூலகத்தில் ஒப்படைத்தாா் .

இதுகுறித்து, தமிழக அரசின் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திகுறிப்பில்,   ஜொ்மனியின் கொலோன் பல்கலைக்கழகத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்றபோது, அங்குள்ள தமிழ்த் துறையைப் பாா்வையிட்டாா். அப்போது, பழங்கால ஓலைச் சுவடிகள் அவரிடம் அளிக்கப்பட்டன. இதைப் பாதுகாத்திடும் வகையில், ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலக அறக்கட்டளையின் அறங்காவலா் ஆா்.பாலகிருஷ்ணன், இயக்குநா் பிரகாஷ், சுதந்தா் ஆகியோரிடம் முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை வழங்கினாா்.

தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்வின்போது, தலைமைச் செயலா் நா.முருகானந்தம் உள்பட அரசுத் துறை உயரதிகாரிகள் உடனிருந்தனா். ஐரோப்பாவில் தமிழியல் ஆய்வுகளுக்கான முக்கிய மையமாக ஜொ்மனியில் உள்ள கொலோன் பல்கலைக்கழகம் விளங்குகிறது. அங்குள்ள தமிழ்த் துறை தொடா்ந்து தொய்வின்றி இயங்க தமிழக அரசு சாா்பில் ரூ.1.25 கோடி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.