சென்னை: உச்சநீதிமன்றத்தின் தேர்வு எதிரொலியாக, அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கல்வித்தகுதியை உறுதி செய்ய பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.
தமிழக பள்ளிக்கல்வித் துறையின்கீழ் சுமார் 46 ஆயிரம் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 2.85 லட்சம் ஆசிரியர்கள், 17 ஆயிரம் பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். அவர்களின் கல்வித்தகுதி குறித்த உண்மைத்தன்மை வாங்கியதை உறுதி செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

ஏற்கனவே பள்ளி கல்வித்துறையில் ஏராளமானோர் போலி சான்றிதழ் பெற்று பணியில் சேர்ந்து பணியாற்றி வருகின்றனர். இதுதொடர்பான பலர்மீது வழக்கு தொடரப்பட்டன. ஆனால், அதன் முடிவுகள் என்ன என்பதே தெரியாத நிலையில் உள்ளது. ஆனால் அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தள்ளனர். ஆனால், தற்போதும் சென்னை மாநகராட்சி உள்பட பல பகுதிகளில் போலி சர்டிபிகேட் மூலம் பலர் ஆசிரியர்களாக பணியாற்றி வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஆசிரியர்கள், பணியாளர்களின் கல்வித் தகுதியை சரிபார்க்க வேண்டுமென தமிழக அரசு அறிவுறுத்தியது.
அதன்படி அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் கல்வித்தகுதி குறித்த உண்மைத்தன்மை தற்போது சரிபார்க்கப்பட்டு வருகின்றன. எனினும், பல்வேறு மாவட்டங்களில் இந்த பணிகள் முடிவடையவில்லை. கல்வி நிறுவனங்களிடம் இருந்து உண்மைத்தன்மை பெறுவதில் தாமதம் ஏற்படுவதாக ஆசிரியர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு வழங்கிய அறிவுறுத்தல்களில், ‘‘ஆசிரியர்கள், பணியாளர்கள் பலர் 10, 12ம் வகுப்பு மற்றும் உயர்கல்விச் சான்றுக்கான உண்மைத்தன்மை பெறாமல் இருக்கின்றனர். எனவே, இந்தாண்டு இறுதிக்குள் அனைவரும் உண்மைத்தன்மை பெற்றிருப்பது அவசியமாகும். தொடர்ந்து இதை கண்காணித்து அனைவரும் உண்மைத்தன்மை வாங்கியதை உறுதிசெய்து இயக்குநரகத்துக்கு அறிக்கை சமர்பிக்க வேண்டும்’’என்று கூறப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவு காரணமாக விரைவில் நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில், ஆசிரியர்களின் கல்வி தகுதிகள் சோதிக்கப்பட்டு வருகின்றன.