சென்னை; அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மூத்த நிர்வாகி செங்கோட்டையன்  இன்று காலை  திடீரென  டெல்லி பயணம் மேற்கொண்டார். இது தமிழக அரசியல்களத்தில் மீண்டும் பரபரப்பை ற்படுத்தி உள்ளது.

ஆனால், செங்கோட்டையன் மனநிம்மதிக்காக  ஹரித்வார் செல்கிறேன் என்றும், இங்கிருந்தால் தேவையில்லாத விமர்சனங்களை தவிர்க்கும் வகையில் தனது பயணம் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால், அவர் அடுத்தக்கட்ட அரசியல் நகர்வு குறித்த டெல்லியில் பாஜக தலைவர்களை சந்திக்கவே சென்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதிமுகவில் எழுந்துள்ள உள்கட்சிவிவகாரத்தைத் தொடர்ந்து, பிரிந்துசென்ற தலைவர்களை ஒன்றிணைக்க வேண்டும் அதிமுக மூத்த தலைவர்  செங்கோட்டையன், எடப்பாடி பழனிச்சாமிக்கு 10 நாட்கள் கெடு விதித்தார். இது அதிமுகவில் மேலும் சலசலப்பை ற்படுத்தியதுத்து. இதையடுத்து, அவரை எடப்பாடி பழனிச்சாமி.  அதிமுகவின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கினார். மேலும் அவரது ஆதரவாளர்களையும் கட்சியில் இருந்து நிக்கினார். இதையடுத்து, அவரது ஆதரவாளர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இருந்து விலகுவதாகஅறிவித்துள்ளார். இது அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த பரபரப்புக்கு மத்தியில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், இன்று கோவை விமான நிலையத்திலிருந்து  டெல்லி புறப்பட்டார்.   கோவை விமான நிலையம் வந்திருந்த செங்கோட்டையனை சந்தித்த செய்தியாளர்கள் பல்வேறு கேளவிகளை எழுப்பினார். அதற்கு பதில் கூறியவர்,  இங்கிருந்தால் தேவையில்லாத விமர்சனங்கள் வருகின்றன. அதனால்,   கடவுள் ராமரைக் காண ஹரித்வார் செல்கிறேன் என்று கூறினார்.

எடப்பாடி தரப்பில் இருந்து அழைப்பு வந்ததா என்ற கேள்விக்கு, நோ கமெண்ட்ஸ் என்ற கூறிவிட்டார்.

டெல்லியில் பாஜக தலைவர் அமித் ஷா, மோடியை சந்திப்பீர்களா என்ற கேள்விக்கு நான் காண செல்வது கடவுள் ராமரைத்தான் என்று பதிலளித்தார்.

வரும் 9 ஆம் தேதி முக்கிய அறிவிப்பு வெளியிடுவதாக சொன்னார்களே என்ற கேள்விக்கு அப்படி ஒன்றும் இல்லை என்று கூறினார் செங்கோட்டையன்.

கோவில் போய் அமைதியாக இருக்கலாம் என்கிறிருக்கிறேன். நான் சொன்ன கருத்துக்கு மாறுபட்ட கருத்து யாரும் சொல்லவில்லை. எனவே, இது அனைவரது மனதிலும் உள்ளது என்று புரிகிறது. பொதுச்செயலாளர் எடுக்கும் முடிவுக்கு நான் கருத்து சொல்ல இயலாது. தொண்டர் மனநிலையைத்தான் நான் சொல்லியிருக்கிறேன். தொண்டர்கள் ஆதரவு தெரிவித்து செல்கின்றனர். இரண்டு நாள்களில் பத்தாயிரம் பேர்களை சந்தித்து உள்ளேன் என்றார்.

அப்போது செய்தியாளர் ஒருவர்,  மூத்த தலைவர்கள் யாரேனும் சந்தித்தனரா என்ற கேள்விக்கு நோ கமெண்ட்ஸ் என்றார் செங்கோட்டையன்.

செங்கோட்டையன் உடன்  விமானத்தில், திமுக எம்.பிக்கள் கணபதி ராஜ்குமார் (கோவை), பிரகாஷ் (ஈரோடு) ஆகியோரும் உடன் சென்றனர். இவர்கள், நாளை குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு குறித்து இன்று நடக்கும் பயிற்சியில் கலந்து கொள்வதற்காக டெல்லி செல்கின்றனர். இருப்பினும், மூவரும் ஒரே விமானத்தில் பயணம் செய்வது புருவங்களை உயர்த்த வைத்துள்ளது.

செங்கோட்டையன் கோவையில் இருந்து இன்று காலை  டெல்லி புறப்பட்டிருக்கும் நிலையில், பாஜக மூத்த தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாகவும் உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் தமிழக அரசியல் களம் மீண்டும் பரபரப்புக்குள்ளாகி உள்ளது.