ஈரோடு; அ.தி.மு.க. பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டது வேதனை அளிக்கவில்லை, மகிழ்ச்சி அளிக்கிறது என்று செங்கோட்டையன் கூறியுள்ளார்.

அதிமுக மீண்டும் வலுப்பெற்று ஆட்சி அமைக்க கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என  மூத்தமற்றும் முன்னாள் அதிமுக அமைச்சரும், எம்எல்ஏவுமான செங்கோட்டையன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடிக்கு 10 நாள் கெடு விதித்திருந்தார்.  இதற்கு ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா மற்றும் கூட்டணி கட்சிகளிடம் இருந்தும் பெரும் வரவேற்பு கிட்டியது.

இதைத்தொடர்ந்து, இன்று காலை கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார்.  இந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுன்படி, செங்கோட்டையனை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கியதுடன், அவரது ஆதரவாளர்களையும் கட்சியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளார். இது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன்,  அ.தி.மு.க. பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டது வேதனை அளிக்கவில்லை, மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறியதுடன்,  அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காகவே கருத்து கூறினேன். எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் மீண்டும் ஆட்சியமைக்க வேண்டும் என்பதற்காகவே ஒருங்கிணைப்பை வலியுறுத்தினேன்.

என்னிடம்   ஜனநாயக அடிப்படையில், என்னிடம் விளக்கம் கேட்டிருக்க வேண்டும். என்னிடம் விளக்கம் கேட்காமலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதிமுக மாபெரும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் என்று சொன்னேன். கட்சிப் பொறுப்புகள் பறிக்கப்படும் என நான் எதிர்பார்க்கவில்லை. என் மீதான நடவடிக்கைக்கு காலம் பதில் சொல்லும், எனது ஒருங்கிணைப்புப் பணி தொடரும்.

அதிமுகவில்தான் ஜனநாயகம் இருப்பதாகவும், யார் வேண்டுமானாலும் கருத்துகளைக் கூறலாம் என மேடைதோறும் எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார். இன்று எனக்கு எதிரான நடவடிக்கைக்கு காலம்தான் பதில் சொல்லும் என்றார்.

மேலும், இது என்னுடைய கருத்து மட்டுமல்ல, ஒட்டுமொத்த தொண்டர்களின் கருத்தும். என் நலன் கருதி அல்ல, கட்சியின் நலன் கருதியே கருத்துக் கூறினேன் என்றும் தெரிவித்துள்ளார்.

கெடு விவகாரம்: அதிமுக கட்சி பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையன் டிஸ்மிஸ்!