சென்னை: தி.மு.க எம்.எல்.ஏ நடத்திய மொய் விருந்தில் ரூ.1.80 கோடி வசூலாகி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஊழல் கருப்புபணம் வெள்ளையாக்கப்பட்டு உள்ளதா என சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

மொய் விருந்து என்பது தமிழ்நாட்டின், குறிப்பாக கிராமப்புறங்களில் நடைபெறும் ஒரு சமூக மற்றும் பொருளாதாரக் கலாச்சார நிகழ்ச்சியாகும்.  இது தனிநபர்கள் அல்லது குடும்பங்கள், தங்கள் அவசர நிதி  தேவைகளுக்காக நிதி திரட்டுவதற்கான ஒரு வழிமுறை.  இதில் கலந்து கொள்பவர்களுக்கு அவர்களின் வசதிகளுக்கு ஏற்க சைவம் மற்றும் அசைவம்  உணவு பரிமாறப்படுவதுடன், அவர்கள் அந்த குடும்பத்திற்கு பணமாக மொய் (பரிசு) வழங்குவார்கள்.  அதாவது,  எதிர்பாராமல் நடக்கும் நிகழ்வுகளில் அந்த வீட்டாரின் பணச்சுமையில் உறவுகள் சிறிதளவு பங்கெடுக்கும் விதமாக இந்த மொய் செய்வதை தமிழர்கள் தொன்று தொட்டு கடைபிடித்து வருகின்றனர். இதன்மூலம் அவர்கள் தங்களது நிதி பிரச்சினைகளை சமாளித்துக்கொள்வார்கள்.
ஆனால், தற்போது, இந்த மொய் விருந்து, தங்களது பணபலத்தை காட்டுவதற்காக நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில்,  பல பெருந்தலைகளும்  அரசியல் கட்சியனிரும் இதுபோன்ற மொய் விருந்துகளை தடபுடலாக  செய்து, பணத்தை வசூலிக்கின்றனர். அது அவர்களின் அவசர நிதி தேவைகளுக்கு அல்லாமல், வருமானத்தை ஈட்டும் வகையிலேயே நடத்தப்பட்டு வருகிறது. மேலும் சிலர் தங்களது கருப்பு பணத்தை வெள்ளையாக்கும் நடவடிக்கையாகவும் இந்த மொய் விருந்தை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில்,   பேராவூரணி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் கடந்த 2022 ம் ஆண்டு ஒரு டன் ஆட்டுக்கறி விருந்து கொடுத்து மொய் விருந்து நடத்தி ரூ.10 கோடிகள் வரை மொய் வாங்கினார். அந்த தொகையை அப்போதே தான் வாங்கிய கடன்களுக்கு திருப்பிக் கொடுத்தார்.
இதையடத்து, மூன்று ஆண்டுகளுக்கு பிறகு தற்போத  மீண்டும்  செப்டம்பர் 5 ந் தேதி வெள்ளிக்கிழமை மொய் விருந்தை பிரமாண்டமாக நடத்தி உள்ளார்.  ‘போட்ட மொய் மட்டும் வாங்கப்படும்’ என்று பத்திரிக்கைகள் அச்சடித்து தான் மொய் செய்தவர்களுக்கு மட்டும் கொடுத்து 450 கிலோ ஆட்டு கறி சமைத்து விருந்து கொடுத்து நடத்திய பணத்தை வாரி சுருட்டி உள்ளார். அதாவது நேற்று நடைபெற்ற  மொய் விருந்தில் ரூ.1.80 கோடிகள் மட்டும் மொய்யாக கிடைத்துள்ளது.

3 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.10 கோடி வாங்கிய எம்எல்ஏ இப்ப ரூ.1.80 கோடி தான் வாங்கி இருக்கிறார் என்று பரபரப்பாக பேசப்படுகிறது.

முன்காலத்தில் பல ஆயிரம்  ஏழைகளின் வாழ்வாதாரத்தை காக்க, நல்ல முறையில் நடந்து வந்த மொய் விருந்துகள் தற்போது ஆடம்பர விழா போல நடத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம்  ஒவ்வொரு ஆண்டும் சுமார் ரூ.500 முதல் ரூ.700 கோடிகள் வரை பணப் புழக்கம் நடைபெறுவதாக கூறப்படுகிறது.