மதுரை: ஜெர்மனியில் முதல்வர் ஸ்டாலின்  முன்னிலையில்,  போடப்பட்ட ஒப்பந்தத்தில் ஒரே ஒரு ஒப்பந்தம் மட்டுமே புதியது மற்ற அனைத்தும் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது எதிர்க்கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டி உள்ளார்.

ஸ்டாலின் ஜெர்மனி பயணத்தில் தமிழ்நாடு அரசு  பொய்யான தகவல்களை தந்து மக்களை ஏமாற்றுகிறது என கடுமையாக விமர்சித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலினின் ஜெர்மனி பயணத்தின்போது,  9ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் 23 புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள நிலையில், அதற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி எதிர்வினையாற்றி உள்ளார்.

இந்த நிலையில், மதுரையில் ஜெர்மனியில் முதல்வர் ஸ்டாலின்  முன்னிலையில்,  போடப்பட்ட ஒப்பந்தத்தில் ஒரே ஒரு ஒப்பந்தம் மட்டுமே புதியது மற்ற அனைத்தும் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது எதிர்க்கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டி உள்ளார்.

“மக்களைக் காப்போம்.. தமிழகத்தை மீட்போம்” என்ற முழக்கத்துடன் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தை எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டு வருகிறார். தற்போது மதுரையில் மக்கள் சந்திப்பு நடத்தி வரும் எடப்பாடி பழனிச்சாமி அங்கு நடைபெற்ற கூட்டத்தில் பேசும்போது,   தமிழ்நாட்டுக்கு முதலீடு ஈர்ப்பாக ஜெர்மனி சென்றுள்ள முதல்வர், அங்கு 23 புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ஆனால், இந்த ஒப்பந்தங்களில் ஒன்றுமட்டுமே புதியது. மற்றவை அனைத்தும்  ஏற்கனவே நடைமுறையில் உள்ளது என எதிர்க்கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டி உள்ளார்.

ஏற்கனவே  மதுரை மாநகராட்சியில் ரூ.200 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. அதில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை மாநகராட்சி மேயரின் கணவரும் கைது செய்யப்பட்டுள்ளார். மேயரின் ஒத்துழைப்பு இல்லாமல் இந்த முறைகேடுகள் நடந்திருக்க முடியாது. எனவே, மதுரை மேயர் கைது செய்யப்பட வேண்டும். மதுரை மேயரைக் காப்பாற்ற தி.மு.க. அரசு முயற்சி செய்கிறது என்று கடுமையாக விமர்சி5த்துடன்,  டிஜிபி நியமனம் குறித்தும் விமர்சித்தார். தி.மு.க. ஆட்சியில் காவல் துறையிலேயே சரிவு ஏற்பட்டுள்ளது. நாட்டை ராணுவம் பாதுகாக்கிறது, மக்களை காவல்துறை பாதுகாக்கிறது. மக்களைக் காக்கும் காவல்துறையின் டி.ஜி.பி. பதவியைக் கூட உரிய காலத்தில் நியமிக்க முடியாத அளவுக்கு தி.மு.க. அரசு சென்றுவிட்டது. தகுதிவாய்ந்த டி.ஜி.பி.யை நியமிக்க வேண்டும் என்று நாம் சொல்லியும் கூட தி.மு.க. அரசு கேட்கவில்லை’ என்றார்.

இதையடுத்து,  மேலூர் பஸ் நிலையம் அருகில் பிரச்சார வாகனத்தில் நின்றபடி பேசும்போது,  தி.மு.க. அரசு விவசாயிகளுக்கு தொடர்ந்து துரோகம் செய்கிறது. டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டம் கொண்டுவந்தவர் மு.க.ஸ்டாலின், அதனை தடுத்து நிறுத்தி விவசாயிகளைப் பாதுகாக்கும் வகையில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக சட்டப்பூர்வ அங்கீகாரம் பெற்றுக்கொடுத்தது அ.தி.மு.க. அரசு.

தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்தியா கூட்டணி வெற்றி பெருமையாக பேசுகிறார் என்கிறார். அதில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் அங்கம் வகிக்கிறது. இப்போதாவது கம்யூனிஸ்ட் அரசிடம் பேசி இணக்கமான முடிவெடுத்து 152 அடியாக உயர்த்தும் நடவடிக்கை எடுங்கள் என்று வேண்டுகோள் வைக்கிறோம். ஆனால், தி.முகவினர் .இதையெல்லாம் செய்ய மாட்டார்கள்.

குடும்பத்துக்கான தேவையைத் தான் செய்வார்கள். இந்த பகுதி விவசாயிகள் நிறைந்த பகுதி. தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன்களை அ.தி.மு.க. ஆட்சியில் இரண்டுமுறை தள்ளுபடி செய்தோம். ரூ.12,100 கோடி தள்ளுபடி செய்தோம். அதிமுக ஆட்சி அமைந்ததும் 4000 அம்மா மினி கிளினிக் திறக்கப்படும். அரசு என்றால் ஏழை மக்களுக்கு நன்மை கிடைக்க வேண்டும் அதுதான் நல்ல அரசுக்கு அடையாளம். ஆனால் அ.தி.மு.க.வின் திட்டங்களை ரத்துசெய்வதுதான் தி.மு.க.அரசின் சாதனையாக உள்ளது” என்றார்.

முன்னதாக வெளிநாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்க புறப்பட்டு சென்ற முதலமைச்சர் முக ஸ்டாலினை எடப்பாடி பழனிசாமி வெளிட்டஅறிக்கையில்,  “முதல்வர் ஸ்டாலின் இதுவரை நான்கு முறை வெளிநாடுகளுக்கு சென்றதாகவும், ஒவ்வொரு முறைமையும் முதலீடுகளை ஈர்க்கிறேன் என்று கூறியிருந்தார். ஆனால், சொல்லும்படியான முதலீடு எதையும் மாநிலத்திற்கு கொண்டு வந்ததில்லை” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

ஐந்தாவது முறையாக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்திற்கு பயணமாகியிருக்கும் ஸ்டாலின் குறித்து, “இந்தப் பயணம் உண்மையிலேயே தமிழகத்திற்கு தொழில்துறை முதலீடுகளை ஈர்க்கவா, அல்லது குடும்ப முதலீடுகளை செய்வதற்காகவா?” என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.

மேலும், மக்களின் கேள்விகளுக்கு முதல்வர் பதிலளிக்க வேண்டிய கட்டாயம் இருப்பதாகவும், ஆனால் ஒவ்வொரு முறையும் வெளிநாட்டு பயணத்தின் பெயரில் நேரத்தை வீணடித்து வருவதாகவும் பழனிசாமி தெரிவித்துள்ளார். “கடந்த பயணங்களில் வெளிநாட்டில் சைக்கிள் ஓட்டி பொன்னான நேரத்தை வீணடித்தார். அதே பாணியை மீண்டும் தொடர்ந்தால் தமிழக மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை” என்று அவர் விமர்சித்தார்.

ஆட்சிக் காலம் முடிவடைய இன்னும் எட்டு மாதங்களே உள்ள நிலையில், முதல்வர் வெளிநாட்டிற்கு செல்லும் தேவையென்ன என்று கேள்வி எழுப்பிய பழனிசாமி, “மக்களின் நலனுக்காக ஆட்சியின் கடைசி மாதங்களை முழுமையாக பயன்படுத்த வேண்டிய நேரம் இது. ஆனால், ஸ்டாலின் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களில் ஈடுபட்டுள்ளார்” என கூறினார்.

முதல்வரின் இந்தப் பயணம் குறித்து சிலர் “இதில் எந்த நன்மையும் இல்லை” என மக்களின் மனநிலையை வெளிப்படுத்துவதாக பழனிசாமி குறிப்பிட்டார். “தமிழகத்திற்கு புதிய முதலீடுகள் வரவில்லை, வேலை வாய்ப்புகள் உருவாகவில்லை, பொதுமக்களுக்கு நிவாரணம் எதுவும் கிடைக்கவில்லை. அப்படியிருக்க, இத்தகைய வெளிநாட்டு பயணங்களால் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை” என்று அவர் வலியுறுத்தினார்.

தன் அறிக்கையில் நிறைவாக பேசிய எடப்பாடி பழனிசாமி, “முதல்வர் ஸ்டாலின் உண்மையில் முதலீடுகளை ஈர்க்கிறாரா அல்லது குடும்ப முதலீடுகளை செய்வதற்காக வெளிநாட்டிற்கு சென்று கொண்டிருக்கிறாரா? இந்த கேள்விக்குப் பதில் தர வேண்டியது அவசியம்” என்று கூறியுள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடக்க இன்னும் 8 மாதங்கள் மட்டுமே உள்ளது. தற்போது முதலமைச்சர் முக ஸ்டாலின் வெளிநாட்டிற்கு சென்று தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை அள்ளி வர உள்ளார். முதலமைச்சரின் தற்போதைய வெளிநாட்டு பயணம், எதிர்வரும் தேர்தலில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்க உதவும் முக்கிய காரணியாக இருக்கும் என தெரிகிறது என காட்டமாக கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டிற்கு ரூ.7020 கோடியில் 26 ஒப்பந்தங்கள் ஜெர்மனியில் கையெழுத்து – 15000 பேருக்கு வேலைவாய்ப்பு! முதலமைச்சர் ஸ்டாலின்…